எனது பார்வையில் “தெய்வத்திருமகள்”

என்னதான் Final Year Project என்று சொன்னாலும் அந்த Busyக்குள்ளேயும் theater க்கு போய் படம் பார்க்கிறது சுகம்தான்.
Trailer பார்த்ததும் போகக்கூடாது என நினைத்த படம் தெய்வத்திருமகள். ஏனென்றால் நடிப்பு என்று சொல்லிவிட்டு விக்ரமின் மாஸ் Image இணை கெடுத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன் மற்றும் விக்ரமை அவ்வாறு பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை.ஆனாலும் internetஇல் விமர்சனங்களை வாசித்து சரி போவோம் என நானும் எனது APIIT சங்க நண்பர்களும் முடிவெடுத்தோம்.
இப்பொழுது விடயத்துக்கு போவோம். நான் இங்கு திரைக்கதையை கூற வரவில்லை; ஏனெனில் எனக்கு திரைக்கதை கூற வராது.
‘தெய்வத்திருமகள்’ ஒட்டுமொத்த நடிகர்களது நடிபுத்திறமைக்கு தீனி போட்ட படம்.
விக்ரம் – அவரின் நடிப்புத்திறமையை பற்றி சொல்லவே தேவையில்லை; மனநலம் குன்றியவராக நடித்திருந்தார் இல்லை இல்லை அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார்.
சந்தானம் – சமீப காலங்களில் Comedyயில் கலக்கி கொண்டிருப்பவர் விவேக் வடிவேலு போன்றவர்களில் இடத்தை முந்தியிருந்தார்; இதிலும் அவரது காமெடி சரவெடி.
அனுஷ்கா – நான் பார்த்த படங்களில் (சிங்கம், வேட்டைக்காரன்) ஏதோ பாடல்களுக்கு குத்து ஆட்டம் போட்டவர்; இதில் வழக்கறிஞ்சராக அசத்தியிருக்கின்றார்.
நாசர் – பழம் பெரும் நடிகர். இவரும் வழக்கறிஞராக அசத்தியிருக்கிறார். இறுதிக்காட்சியில் நீதிமன்றத்தில் பேசும் வசனம், நடிப்பு பிரமாதம்.
அடுத்தது அந்த குட்டி girl. நிலாவாக நடித்திருந்தாரே அவர்தான். பெயர் ஸராஹ் வாம். அப்படியொரு cuteness சிறப்பான நடிப்பு . முதல் பாதியை அவரின் நடிப்புக்காகவே ரசிக்கலாம் . ஒரு சிறிய பொட்டு மற்றும் விபுதியால் சிறிய கோடு. விக்ரம் சொன்னது போலே தலைப்புக்கு ஏற்ற பொண்ணு “தெய்வத்திருமகள்”. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது “நிலா எப்ப திரும்பி வரும்?” என்று கேட்க வைக்கிறார்.
ஒவ்வொருவரும் தத்தமது பாத்திரங்களில் வாழ்ந்து காட்டி இருக்கின்றனர்.
பாடல்களை ஒலி வடிவில் மட்டும் கேட்கும் போது பிடிக்கவில்லை. (உண்மையை சொல்லத்தானே வேணும் – எங்கட ரசனை அப்படி ) ஆனால் காட்சிகளுடன் பாடல்களும் நன்றாகவே இருந்தன. பின்னணி இசையில் GVP கலக்கயிருக்கிறார்.
அங்காடித்தெரு, மொழி என கதையை நம்பி எடுக்கப்பட்ட பட வரிசையில்  என்னை கவர்ந்த படம் இது.
இறுதியில் வரும் நீதிமன்ற காட்சியில் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தது; இயக்குனரின் திறமையை சான்று பகிர்கின்றது. சிறந்த காட்சியமைப்பு.
ஒவ்வொருவரும் குடும்பத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
என்ன பாஸ் ரொம்ப கஷ்டப்பட்டு வாசிக்கிறீன்களோ??????? இதுதான் எனது முதல் திரை விமர்சனம் (வேறு பெயர் தெரியேல்ல). இன்னும் பல எழுதி அனுபவம் கிடைத்ததும் கொஞ்சம் நல்லா எழுதுவோம் என்ற நம்பிக்கை இருக்கு. நம்பிக்கைதானே வாழ்க்கை.
x

Comments

Popular posts from this blog

ஆருயிர் நண்பனுக்கு, அன்பு நண்பியின் பிறந்த தின வாழ்த்து

வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்

அகவை அறுபது