Posts

Showing posts from 2011

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

Image
Original Post Here முக்கிய பல வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் Facebook என்று அழைக்கப்படும் முகப்புத்தகத்தில் Login செய்து நேரத்தை வீண்விரயம் செய்பவனாகவும். மருதமுனையை ஏதோ எங்களால் (நானும், எனது நண்பர் அணியும்) முடிந்த அளவிற்கு  Maruthamunai Online  மூலமாக உலகெங்கும் வீயாபிக்கச் செய்தது மட்டுமல்லாமல் தினமும் நடக்கும் சம்பவங்களை முடிந்தளவிற்கு ஒலி ஒளி வடிவில் உலகிற்கு எடுத்துச் செல்ல பங்களிப்பு செய்தவர்களில் ஒருவன் என்ற வகையிலும் முகப்புத்தகத்தில் மருதமுனை மக்கள் எனும் தலைப்பில் ஒரு சிறிய ஆகக்கத்தை எழுத தகுதியுடையவன் என்று நினைத்து இந்த ஆக்கத்தினை எழுத விளைகின்றேன். இவ்வாக்கம்  Maruthamunai Online  இல் பதிவேற்றம் செய்யக்கூடியதாக இருந்தாலும் இவ் எண்ணங்கள் Maruthamunai Online நிர்வாகத்தின் சிந்தனைகளாகவோ ஆசிரியர் பீடத்தின் சிந்தனைகளாகவோ யாரும் கருதிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக எனது தனிப்பட்ட Blog இல் பதிவேற்றம் செய்கிறேன். இது எனது தனிப்பட்ட சிந்தனை மட்டுமே என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முகப் புத்தகத்தில் தினந்தோறும் பல புதிய முகங்கள் இணைத்த வண்ணமே உள்ளன. குறிப்பாக இளைஞ

வீரகேசரிக்கு வேலாயுதத்தின் பதில்

Original Post: Click Here இலங்கையின் பழம் பெரும் பத்திரிகை, பலர் விரும்பி வாசிக்கும் பத்திரிகை மற்றும் ஊடகவியல் சார்ந்த பல விருதுகளை வென்ற நாளிதழ் வீரகேசரி என்றால் அது மிகையாகாது. வீரகேசரி நாளிதழ் இன்றைய காலத்துக்கும் தொழினுட்பத்துக்கும் ஏற்ப தனக்கான இணைய முகவரியில் உலாவருகின்றமை யாவரும் அறிந்ததே.ஆனால் இவ் இணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளமை கவலைக்குரியதே .நேற்று "வேலாயுதம் திடுக்கிடும் தகவல்" எனும் தலைப்பில் வெளியான கட்டுரையே இவ் அச்சத்துக்கும் கேள்விக்குறியாகியுள்ள வீரகேசரியின் நம்பகத்தன்மைக்கும் காரணமாகும். http://www.virakesari.lk/cinema/head_view.asp?key_c=௩௩௦ எனும் இணய முகவரியில் வாசிக்கக் கிடைத்த ஆக்கத்தின் ஸ்க்ரீன் ஷாட் இதோ இக்கட்டுரையின் இரண்டாம் பந்தியில் "தற்போது படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்த நிலையில் இப்படத்தின் ஒரு காட்சி கூட எந்த திரையரங்கிலும் இல்லையாம். " என வேலாயுதம் படத்தினை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை நாம் இணையத்தில் தேடிப்பார்த்த போது ஒன்லைன் டிக்கெட்டின் மூலமாக இப்பொழுது கூட சில திரையங்குகளில் காட்சிக்கு

அந்நாள் முதல்

உன்  கிறுக்கல்கள்  ஓவியங்களாக, உன்  பேச்சுக்கள் கவிதைகளாக, உன் வார்த்தைகள் இலக்கியங்களாக, மாறிய அந்நாள் முதல் வரைந்தேன்  ஓவியமாக, எழுதினேன் கவிதைகளாக, படைத்தேன் இலக்கியமாக உன்னை......

எனது பார்வையில் “தெய்வத்திருமகள்”

என்னதான் Final Year Project என்று சொன்னாலும் அந்த Busyக்குள்ளேயும் theater க்கு போய் படம் பார்க்கிறது சுகம்தான். Trailer பார்த்ததும் போகக்கூடாது என நினைத்த படம் தெய்வத்திருமகள். ஏனென்றால் நடிப்பு என்று சொல்லிவிட்டு விக்ரமின் மாஸ் Image இணை கெடுத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன் மற்றும் விக்ரமை அவ்வாறு பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை.ஆனாலும் internetஇல் விமர்சனங்களை வாசித்து சரி போவோம் என நானும் எனது APIIT சங்க நண்பர்களும் முடிவெடுத்தோம். இப்பொழுது விடயத்துக்கு போவோம். நான் இங்கு திரைக்கதையை கூற வரவில்லை; ஏனெனில் எனக்கு திரைக்கதை கூற வராது. ‘தெய்வத்திருமகள்’ ஒட்டுமொத்த நடிகர்களது நடிபுத்திறமைக்கு தீனி போட்ட படம். விக்ரம் – அவரின் நடிப்புத்திறமையை பற்றி சொல்லவே தேவையில்லை; மனநலம் குன்றியவராக நடித்திருந்தார் இல்லை இல்லை அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார். சந்தானம் – சமீப காலங்களில் Comedyயில் கலக்கி கொண்டிருப்பவர் விவேக் வடிவேலு போன்றவர்களில் இடத்தை முந்தியிருந்தார்; இதிலும் அவரது காமெடி சரவெடி. அனுஷ்கா – நான் பார்த்த படங்களில் (சிங்கம், வேட்டைக்காரன்) ஏதோ பாடல்களு