Posts

Showing posts from April, 2021

சில சம்பவங்கள்.....

Image
சம்பவம் 01 - சுனாமியின் பின் (2005) ஷம்ஸ் மத்திய கல்லூரியின் கட்டிடங்கள் சுனாமியில் அழிவடைந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து பாடசாலையினை எங்கு நிர்மாணிப்பது எனும் வாதம் எழுந்தது. ஒரு சாரார் பழைய இடத்திலும் மற்றொரு சாரார் மேட்டு வட்டையிலும் நிர்மாணிக்க வேண்டும் என விரும்பினர். இதில் எனது தந்தை மர்ஹூம் எச்.எல். ஜமால்தீன் அவர்கள் ஏற்கனவே இருந்த இடத்தில் அமைய வேண்டும் என்ற கொள்கையில் இருந்தார். அதன் பின்னர் மேட்டு வட்டையில் அமைய வேண்டும் என விரும்பின சாரார் தங்கள் பக்க நியாயங்களை எனது தந்தையிடம் எத்தி வைத்தனர். பின்னர் மேட்டுவட்டையில் வர வேண்டும் என்ற சாராருடன் இணைந்து பாடசாலையின் மீழ் நிர்மாணத்திற்கு தன்னை அர்பணித்திருந்தார். சம்பவம் 02 - 2017 அல்லது 2018 எமது ஷம்ஸ் மத்திய கல்லூரி ஆனது தேசிய பாடசாலையாக மாற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்டுவதாகவும், அதற்கு நாம் உதவி செய்ய வேண்டும் எனவும் ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க, கொழும்பு கிளை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அச்சமயம் நான் பின்வரும் விடயங்களை எத்தி வைத்தேன். 1. தேசிய பாடசாலையாக மாறுவதில் நன்மை என்ன தீமை என்ன என்பன பற்றி ஆரா