Posts

Showing posts from 2021

மதியாதோர் தலைவாசல் மிதியாதே

இனம், மதம், தொழில், பிறப்பு, பால் வேறுபாடுகளின்றி ஒரு சக மனிதனை மனிதனாக மதிக்க கற்று கொள்ள வேண்டும்.  எவராயினும் எவ்வகையான உறவாயினும் நம்மை மதிக்காதவிடத்து அவரிடம் உதவியோ அல்லது ஏதாவது நலனோ கேட்டு அவரின் வாசற்படி மிதியாது எமது அறிவையும் ஆற்றலையும் அதிகரித்து கொண்டு பிறருக்கும் உதவி செய்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். 

Happy wedded life Arunnirthana

Image
 Happy wedded life ArunNirthana Arulanantham . A friend who understand and try to convey the truth in a proper way.

பூக்களால் நிரப்பு

Image
  உன் இதயத்தை பூக்களால் நிரப்பு... தேன் குடிக்கும் சாட்டிலாவது  உனை பார்க்க நான் வருவேன்...  நிறங்கொண்ட ரோஜாக்கள் தேவையில்லை... மணம் கொண்ட மல்லிகை போதும்... என் நினைவுகள் கொண்டு நீரூற்று... கனவுகளோடு காதல் செய்...

Some wishes are always special

Image
  Some wishes are always special. This is one received today on my birthday from Nasmy Meera Mohideen.

ஆருயிர் நண்பனுக்கு, அன்பு நண்பியின் பிறந்த தின வாழ்த்து

Image
 ஆயிரம் மனிதர்கள் அடுக்கடுக்காய் அவனியிலே அவதரித்திட..... ஆயிரத்தில் ஒருவனாய் எனதுள்ளம் நிறைந்த அன்பான நட்பே ........ என்  துயர் கண்ட போதினிலே துடித்திடும் புழுவாவாய்...  உடன் என் தோள் கொடுக்கும் தோழமையாவாய்.... இன்பம் அது திளைக்கையில் மகிழ்ந்திடும் என் உயிராவாய்..... உச்சி முகர்ந்திடுவாய்..... உன்னை போல் ஓர் நண்பன் யாவருக்கும் கிடைத்திட்டால் மனம் பட்டாம்பூச்சி போல் ஜனிக்கும்....  இன்று போல் என்றும் நீ உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வல்ல இறைவா துணைபுரிவானாக!

சில சம்பவங்கள்.....

Image
சம்பவம் 01 - சுனாமியின் பின் (2005) ஷம்ஸ் மத்திய கல்லூரியின் கட்டிடங்கள் சுனாமியில் அழிவடைந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து பாடசாலையினை எங்கு நிர்மாணிப்பது எனும் வாதம் எழுந்தது. ஒரு சாரார் பழைய இடத்திலும் மற்றொரு சாரார் மேட்டு வட்டையிலும் நிர்மாணிக்க வேண்டும் என விரும்பினர். இதில் எனது தந்தை மர்ஹூம் எச்.எல். ஜமால்தீன் அவர்கள் ஏற்கனவே இருந்த இடத்தில் அமைய வேண்டும் என்ற கொள்கையில் இருந்தார். அதன் பின்னர் மேட்டு வட்டையில் அமைய வேண்டும் என விரும்பின சாரார் தங்கள் பக்க நியாயங்களை எனது தந்தையிடம் எத்தி வைத்தனர். பின்னர் மேட்டுவட்டையில் வர வேண்டும் என்ற சாராருடன் இணைந்து பாடசாலையின் மீழ் நிர்மாணத்திற்கு தன்னை அர்பணித்திருந்தார். சம்பவம் 02 - 2017 அல்லது 2018 எமது ஷம்ஸ் மத்திய கல்லூரி ஆனது தேசிய பாடசாலையாக மாற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்டுவதாகவும், அதற்கு நாம் உதவி செய்ய வேண்டும் எனவும் ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க, கொழும்பு கிளை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அச்சமயம் நான் பின்வரும் விடயங்களை எத்தி வைத்தேன். 1. தேசிய பாடசாலையாக மாறுவதில் நன்மை என்ன தீமை என்ன என்பன பற்றி ஆரா

தலைக்கனம் இல்லா பணிவின் இலக்கணம்

Image
எம்மவர்கள் உயர் பதவிகளில் கடமையாற்றும் அலுவலகங்களுக்கு நாம் விருந்தாளியாக செல்லும் போது நிழற்படம் எடுப்பது வழக்கம்; அந்த வகையில் உவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த போது பதிவாளர் அல்ஹாஜ். கலாநிதி ஹிபத்துல் கரீம் அவர்களை நிழற்படம் எடுக்க அழைத்தேன்.  சரி என்று அழைத்தவர் என்னோடு எழுந்து நின்று போட்டோ எடுத்தார். ஆனால் நான் Facebook இல் பலரின் படங்களில் அலுவலகத்தின் மேலதிகாரி இருக்க விருந்தாளி நின்றே எடுத்திருப்பர். ஆனால் இங்கு நடந்த விடயம் எதிர் மாறானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது. எம்மவர்கள் படம் எடுக்க உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எழுந்து சமனாக நின்று எடுத்தால் நன்றாக இருக்கும்..  என்ன சேர் சிரிக்க தான் இல்லை..