முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

முக்கிய பல வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் Facebook என்று அழைக்கப்படும் முகப்புத்தகத்தில் Login செய்து நேரத்தை வீண்விரயம் செய்பவனாகவும். மருதமுனையை ஏதோ எங்களால் (நானும், எனது நண்பர் அணியும்) முடிந்த அளவிற்கு Maruthamunai Online மூலமாக உலகெங்கும் வீயாபிக்கச் செய்தது மட்டுமல்லாமல் தினமும் நடக்கும் சம்பவங்களை முடிந்தளவிற்கு ஒலி ஒளி வடிவில் உலகிற்கு எடுத்துச் செல்ல பங்களிப்பு செய்தவர்களில் ஒருவன் என்ற வகையிலும் முகப்புத்தகத்தில் மருதமுனை மக்கள் எனும் தலைப்பில் ஒரு சிறிய ஆகக்கத்தை எழுத தகுதியுடையவன் என்று நினைத்து இந்த ஆக்கத்தினை எழுத விளைகின்றேன்.Maruthamunai Onlineஇவ்வாக்கம் Maruthamunai Online இல் பதிவேற்றம் செய்யக்கூடியதாக இருந்தாலும் இவ் எண்ணங்கள் Maruthamunai Online நிர்வாகத்தின் சிந்தனைகளாகவோ ஆசிரியர் பீடத்தின் சிந்தனைகளாகவோ யாரும் கருதிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக எனது தனிப்பட்ட Blog இல் பதிவேற்றம் செய்கிறேன். இது எனது தனிப்பட்ட சிந்தனை மட்டுமே என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முகப் புத்தகத்தில் தினந்தோறும் பல புதிய முகங்கள் இணைத்த வண்ணமே உள்ளன. குறிப்பாக இளைஞர்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும். இதற்கு மருதமுனை மக்களும் விதிவிலக்கல்ல.
தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மனிதர்கள், முக்கியமாக இளைஞர் யுவதிகள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுள் நானும் ஒருவன். ஆனால் சில மாதமாக முகப்புத்தகத்தில் மருதமுனை இளைஞர்களின் போக்கு கவலை தரும்விதமாகவே இருக்கின்றது.
இதில் முக்கியமாக Fake profile creating என சொல்லப்படும் பொய்யான பெயர்களில் Profileகளை உருவாக்குவது மற்றும் அவற்றினை கொண்டு மற்றவர்களை சாடுவது இடம் பிடிக்கின்றன. இதில் மிகவும் மனவருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் இதன் பாதகத்தன்மை விளங்கியவர்களும், தெரிந்தவர்களும் கூட போலியான கணக்குகள் (Fake profile) என்று அறிந்தும் Friend Requestஇனை Accept செய்கின்றனர். இதில் பலர் மருதமுனையின் பெயரை உபயோகிக்கின்றனர். Mohamed Maruthamunai, Fathima Maruthamunai, மருதமுனையின் குரல், நலன் விரும்பி மருதமுனை   என இப்பட்டியல் நீள்கிறது.
Mohamed Maruthamunaiஇன்னுமொரு வகையாக உன்மையான நபர்களின் பெயர், தொழில், தொழில் செய்யும் இடம் என்பன முறைகேடான விதத்தில் பயன்படுத்தப்பட்டு அக்குறிப்பிட்ட நபரை போல் பாசாங்கு செய்து அக்குறிப்பிட்ட நபரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது. முக்கியமாக பெண்களின் பெயரில் கணக்குகள் தொடங்குதல் இங்கு வருந்தத்தக்கது.பாத்திமா என்ற முற்பெயருடன் தொடங்கும் போலி கணக்குகள் ஏராளம். சம்மந்தமே இல்லாமல் சுய விபரத்தை தாங்கி வரும் இவ் கணக்குகளை கண்டு ஆண்கள் ஏமாறுகின்றனர், சாட் கூட பண்ணுகின்றனர்.
Fathima Maruthamunai
Nalan Virumbi Maruthamunaiஅருகில் காணப்படும் நலன் விரும்பி மருதமுனையின் இன Profile Picture இனை பாருங்கள். அனுஷ்காவின் நிழற்படமாகும். அனுஷ்கா எப்படி மருதமுனையின் நலன் விரும்பியாக முடியும். எனது முகப் புத்தக நண்பர்கள் கூட இந்த கணக்குக்கு நண்பர்களாக உள்ளனர். இவர்கள் கொஞ்சமாவது யோசிக்க மாட்டார்களா? அனுஷ்கா தான் மருதமுனையின் நலனில் அக்கறை கொள்ள மாட்டார்; இக் கணக்கை வைத்திருப்பவர்கள் எப்படி அக்கறை கொள்வார்கள் என்று நாம் நம்புவது!!???. அக்கறை கொள்பவராக இருந்தால் இவ்வாறு பெண்ணின் நிழற்படத்தை Profile Picture ஆக இட்டிருக்க மாட்டார். இவ்வாறான Profile மருதமுனையின் மானத்தை போக்கும் விடயமாகத்தான் காணப்படும்.ஆகவே மருதமுனையின் நேசன் என்ற வகையில் மருதமுனையின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன்.
நீங்கள் செய்யக் கூடியவை என்ன??
  • போலி கணக்குகளை ஆரம்பிக்காதீர்கள். 
  • போலி கணக்குகளில் இருந்து வரும் Friend Request களை Accept செய்யாதீர்கள். அவ்வாறு Accept செய்வதனால் நீங்களும் இவ்வீண் செயலை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் உங்கள் கணக்குகள் Hack செய்யப்படக்கூடிய வாய்புக்களும் உள்ளது.
  • தெரியாவர்களிடம் இருந்து வரும் Friend Request களை Accept செய்யாதீர்கள். முக்கியமாக பெண்கள்.
  • தயவு செய்து மற்றவர்களுடைய மனம் புண்படும் விதமாக எதுவும் பதிவேற்றம் செய்யாதீர்கள்.முக்கியமாக Photos மற்றும் Videos .
  • தயவு செய்து உங்களுடைய சொந்த மண்ணுக்கு களங்கம்  விளைவிக்கும் விதமாக கணக்குகள் ஆரம்பிக்காதீர்கள். 
  • மதம், மண், சொந்த பந்தங்கள், தனி நபர்களுக்கு தீங்கு,களங்கம் ஏற்படும் வண்ணம் எதுவும் செய்யாதீர்கள். 
“மக்கம் தப்பினால் மருதம்” என்று மருதமுனையை புகழ்வதுண்டு. எப்பொழுதும் இந்நற்பெயரை நாம் காப்பாற்ற வேண்டும்.நாம் எமது மன சாட்சிக்கு துரோகம் இளைத்தவர்களாக நாம் மாறக்கூடாது. எமது மண்ணுக்கு துரோகம் இழைத்தவர்களாக மாறக்கூடாது. நாம் எப்பொழுதும் எமது மண்ணுக்கு எம்மால் முடிந்த நன்மையை செய்ய வேண்டும்.
Socail Media ஒரு மிகப் பெரிய ஆயுதமாகும். அதை எமக்கு தேவையானவாறு உபயோகிக்க முடியும். ஆகவே அதனை நல்லவற்றுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.இக்கட்டுரை மூலம் நான் எந்த வகையிலாவது மருதமுனையையும் அதன் துய்மையையும் மாசுபடுத்தும் விதமாக நடந்திருப்பதாக நீங்கள் கருதினால் நான்மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
ஆனால் இது யதார்தமான உண்மை…..

Comments

Popular posts from this blog

ஆருயிர் நண்பனுக்கு, அன்பு நண்பியின் பிறந்த தின வாழ்த்து

வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்

அகவை அறுபது