96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்

96 Movie Review by Suhail Jamaldeen

நேற்றைய தினம் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தினை எனது காதல் மனைவியுடன் பார்க்க கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் நேரான விமர்சனக்களை (positive review) பார்த்த பின்னரே இப்படத்திற்கு போகும் எண்ணம் எனக்குள் எழுந்தது.

தங்கள் பாடசாலை பருவ காதலை இப்படத்தினூடாக அனுபவித்ததாக பலர் கருத்துக்கூறியிருந்தனர். என்னை பொறுத்தவரையில் எனது சொந்த வாழ்க்கையையும் தாண்டி பலரது தனிப்பட்ட விசயங்களையும் அறிந்தவன் என்ற வகையில் பள்ளி பருவ காதலையும் தாண்டி கல்லூரியில் காதலித்தவர்கள் முதல், வேலைத்தளத்தில் காதலித்தவர்கள் என வாழ்க்கையில் ஒரு முறையாவது காதலித்தவர்களுக்கு இப்படத்தில் வரும் பல காட்சிகள் தங்களது கடந்த வாழ்க்கையுடனும் மனதுடனும் ஒன்றித்து பயணிக்கும் என்பது நிதர்சனம்.

அதிலும் நீங்கள் இளையராஜாவில் பாடல்களுக்கு அடிமையென்றால் இப்படம் உங்கள் மனதில் பல நாட்களுக்கு நிழலாடும்.

எனக்கு பிடித்த காட்சிகளாக

  • படத்தின் ஆரம்பத்தில் புகைப்படக்கலைக்கு “அக்கணம் நமக்கு சொந்தம்” என்று கூறப்படும் விளக்கம்
  • குட்டி திரிஷா விஜய் சேதுபதி வகுப்பறையில் உடகார்வது....
  • Get together சமயத்தில் விஜய் சேதுபதி “யமுனை ஆற்றிலே” பாடலை பாட சொல்லும் விதம்..
  • கை மீது கை வைத்து கியர் போடுவது…..
  • காதலே காதலே பாடல் மற்றும் அதன் ஒளிப்பதிவு….
  • திரிஷா விஜய் சேதுபதியின் மாணவர்களிடம் எப்படி விஜய் சேதுபதி propose பண்ணினார் என கூறுவது...
  • சேர் நல்லவர் என்று தெரியும் ஆனா எப்படி நல்லா பாத்துக்கிர்ரது தெரியெல்ல என்று திரிஷா கூறி நெகிழும் காட்சி...
  • படத்தின் climax இல் இன்னும் கொஞ்சம் நேரம் உன்னுடன் இருக்கவா என திரிஷா கேட்கும் IMG_4988தருனமும்; திரிஷா விஜய் சேதுபதி அழுவதும்; திரிஷா விஜய் சேதுபதி இருவரும் நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவிக்கும் தவிப்பும் திரிஷா விஜய் சேதுபதியின் கண்களை மூடுவதும் ( முழு climax என்று வைத்துக்கொள்ளலாம்)
  • இன்னுமொரு சிறப்பான விசயம் என்னென்றால் இருவரும் தனிமையிலும் தங்களது கட்டுப்பாட்டை மீறாமல் இருப்பது....
  • 96-Movie-Stills-8படம் முழுக்க “டா” போட்டு திரிஷா சேதுபதியை விழிக்கும் காட்சிகள் காதலைத்தாண்டிய நட்பை பிரதிபலிக்கின்றன. (30 வயதாகியும் என்னையும் பாசத்துடன் “டா” என்றழைக்கும் நண்பிகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர் . எப்பூடி!!)
  • இருவரும் நடந்து கொண்டே பேசுவது... அது செம பீல்….

இன்னும் பல காட்சிகள் பிடித்திருந்தாலும் மேலுள்ளவை என்றும் மறக்காத சுவடுகள்

படத்தை ஒரு முறை தியட்டர் போய் பாருங்கள்; காதலியினை/காதலனை ஏதாவது ஒரு காரணத்திற்காக பிரிந்திருந்தால் மீண்டும் அவள் அவளாகவே நமக்கு கிடைக்க மாட்டாளா என்ற ஏக்கத்துடன் திரையரங்கை விட்டு வெளியேறுவீர்கள்; உங்கள் காதல் உண்மையாகவிருந்தால்.


கதவுகளை மூடாமல் வழி அனுப்புகிறேன்
காத்திருகின்றேன்
நீ என் காதலுடன் திரும்புவாய் என்ற நம்பிக்கையுடன்

Comments

Post a Comment

Popular posts from this blog

ஆருயிர் நண்பனுக்கு, அன்பு நண்பியின் பிறந்த தின வாழ்த்து

வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்

அகவை அறுபது