நட்பும் அன்பும் உணர்ச்சிகளுக்கு அடிமையானவை...

வாழ்க்கையில் பல நட்புக்கள் வந்து போகும்; சில நட்புக்கள் பல பாடங்கள் கற்பிக்கும்.
அப்பாடங்களில்  பல எவ்வளவு பணம் கொடுத்தாலும் கற்க முடியாதவையாக இருக்கும்.
அப்பாடவிதானங்களில் சில தியாயகங்களாக இருக்கலாம், சில துரோகங்களாக இருக்கலாம், சில ஏமாற்றங்களாக இருக்கலாம்.
சில நட்புக்கள் மீது நாம் அறிந்தோ அறியாமலோ அளவு கடந்த அன்பும், பாசமும் வைப்போம், அவர்கள் மீது உண்மையாக இருப்போம், அவர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக கேட்போம் நம்புவோம்.
அதே போல் அவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்போம். இன்நினைப்பு தான் பலருக்கு பாடம் கற்பிக்க தொடங்கும். நாம் எவ்வளவுக்கு அன்பும் பாசமும் வைக்கின்றோமோ அதே அளவு பாசம் நம் மீதும்  அவர்கள் வைக்க வேண்டும் என்று நினைப்பது மடமையன்றி வேறெதுவுமில்லை. அவர்கள் பக்கம் நின்று யோசிக்கும் போது அதற்கு சரியான காரணமும் இருக்கலாம். 
எதுவாயிருப்பினும் இப்படி நட்புகள் மீது கொண்ட நம்பிக்கை ஏமாற்றப்படும் போது மன உளைச்சலின் உச்சத்துக்கும் கொண்டு செல்லலாம்.
இரண்டு விதமாக நாம் இவ்வகையான பிரச்சினையை அணுகலாம்.
  1. எமது நற்பு எமது அன்பையும், பாசத்தையும் புரிந்து கொள்ளா விட்டாலும் எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி  நாம் அவர்கள் மீது எவ்வகையான அன்பும் பாசமும் கொண்டுள்ளோமோ அதை அவ்வாறே தொடர்வது. கொட்ட கொட்ட அன்பும் பாசமும் குறையவா போகிறது….
  2. நமது அன்பையும் பாசத்தையும் புரிந்து கொள்ளாதவர்களிடம் அதை காட்டாமல் விடுவது.எங்கே நம் அன்புக்கும் பாசத்துக்கும் மரியாதை இல்லையோ அங்கே காட்டிடாமல் விடுவது.
இவ்விரண்டு முறைகளில் எது நம் மனச்சாட்சிக்கு சரியாக படுகிறதோ அவ்வழி செல்வதே சாலச்சிறந்தது.
எது எவ்வாறிருந்தாலும் சில சிறந்த நட்புக்கள் என்னை சுற்றி இருந்து கொண்டே தான் இருக்கின்றன. அவர்களுக்காக இறைவனை பிரார்திக்கின்றேன். அந்நட்புக்கள் கிடைக்க என்றுமே கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
நட்பும், அன்பும் உணர்ச்சிக்கு கட்டுப்பட்டவை, அவற்றை நாமே சரியாக கையாள வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஆருயிர் நண்பனுக்கு, அன்பு நண்பியின் பிறந்த தின வாழ்த்து

வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்

அகவை அறுபது