வாழ்கைத் தத்துவத்தை உணர்த்தும் இன்னொரு மெலோடி – நதி போகும் கூழாங்கல் பயணம்
சிலர் இளையராஜா பாட்டு கேட்டவுடன் பிடிக்கும் என்றும் ரஹ்மான் பாட்டு கேட்க கேட்க தான் பிடிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் பாலா, தங்கர்பச்சன், மிஸ்கின் போன்ற இயக்குனர்களின் இசையமைப்பாளர்கள், மற்றும் அவர்களுடைய இசை தேர்ந்தேடுப்புகளும் சிறப்பானதாகவே இருந்து வருகின்றன. அவ்வாறான தேர்ந்தெடுப்புகள் கேட்டவுடனே பிடித்தும் போய் விடுகிறது. இயக்குனர் மிஸ்கினின் வெளிவரவிருக்கும் படமான பிசாசு திரைப்படத்தின் பாடலும் அவ்வாறுதான். கீழே உள்ள பாடலை கேட்டு பாருங்கள் உங்களுக்கே பிடிக்கும். எனக்கு பிடித்த வரிகள் வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே