Posts

Showing posts with the label எனக்கு பிடித்த பாடல்

உயிரே உன் உயிரென நான் இருப்பேன்... இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்...

Image
படம் :  சீரோ (2016) இசை : நிவாஸ் கே பிரசன்னா  வரி கள் : கபிலன்  பாடகர் : அனிருத்  இன்று YouTube  இல் அனிருத் பாடல்களை கேற்கும் போது இப்பாடலில் ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்ந்தேன். பாடலின் இசையும் அருமை.  எனக்கு பிடித்த வரிகள் உயிரே உன் உயிரென நான் இருப்பேன்... இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்...

காதலில் தோல்வி இருக்கலாம் ஆனால் ஏமாற்றம் இருக்க கூடாது - தொலைந்தே தனியே யாருமில்லை

Image
வேஷம் நீ…… பொய்கள் நீயே….. மாற்றம் நீ……நான் உடைந்தேனே….. (அவர்கள் மாறுவதில்லை; நாம் தான் நம்புகின்றோம்) படம்:  கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் பாடல்:  கனவே நீ நான் விழிக்கவில்ல

நா. முத்துகுமார் மற்றும் யுவன் ஷங்கராஜா இணைவின் மற்றுமொரு மாயம் "ஆராரோ பாட இங்கு தாயுமில்லை"

Image
சில பாடல்கள் திடீரென மனதில் தோன்றி,  கண்ணில் ஈரத்தை வரவழைக்கும். அப்படியான ஒரு பாடல்தான் "ஆதலால் காதல் செய்வீர்" திரைப்படத்திலிருந்து "ஆராரோ பாட இங்கு தாயுமில்லை" பாடல். பாடலாசிரியர் ந. முத்துக்குமார் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகுக்கு எவ்வளவு பெரிய  இழப்பு என்பது இவ்வகையான பாடல்களை கேட்கும் போது தான் புரிகின்றது. இந்த பாடலை படமாக்கிய விதமும் இப்பாடலை மேலும் சோகமாக்குகின்றது. கடைசி வரை கலங்க கூடாது என்றிருந்தாலும் இறுதியில் அக்குழந்தை நிலத்தின் சூடு தாங்காமல் அழுவதை பார்த்ததும் எப்படி பட்ட கல் நெஞ்ச காரரும் கலங்குவர். எனக்கு பிடித்த வரிகள் பூமியிது புனிதமில்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்றுக்கொள் நல்லது இந்த உலகம் என்பது இன்பதுன்பம் உள்ள பாதையடா நீ முட்டிமோதி எழ வழிகள் சொல்லித்தரும் கீதையடா

வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்

Image
சில நாட்களாக பாடல் வரிகளை அவதானித்து அதன் அர்த்தங்களை புரிய முற்பட்டிருந்தேன். அர்த்தம் புரிந்து பாடல் கேட்பதில் ஒரு தனி சுகம் இருப்பதையும் உணர்ந்திருந்தேன். அப்படி பாடல்களை யுடியூப்பில் கேட்கும் பொழுது சகா திரைப்பட (இன்னும் [30.10.2018] வெளிவரவில்லை) யாயும் ஞாயும் பாடல் இடை மறித்தது. இசை அற்புதமாக இருந்தது மட்டுமன்றி வரிகள் புரியாதவையாகவே இருந்தன. கேட்ட உடனேயே பிடித்தருந்தாலும் வசனங்ககளுக்கான கருத்துக்களை தேடியே தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பாடலில் ஆரம்ப வரிகள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நூல் 40 ஆவது பாடலிலிருந்து பெறப்பட்டுள்ளது.  எட்டுத்தொகை நூல்கள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு பாடல் யாயும் ஞாயும் யா ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே கருத்துரை என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை ...

மிகவும் பிடித்த பாடல் - மெல்லினமே மெல்லினமே

Image
இன்று வரை எனக்கு பிடித்த பாடலினை இவ்வலைத்தளத்தில் பதிவிடாமல் விடுபட்டிருப்பது இன்று நினைவுக்கு வந்தது. விஜயின் ஷாஜஹான் படத்தில் வரும் மெல்லினமே மெல்லினமே பாடல் எனக்கு பிடித்த பாடலாக எனது உள்ளத்தில் இடம் பெற்றிருக்கின்றது. இப்பாடலே எனக்கு என்றும் பேவரைட் பாடலாக இருக்கும் என நம்பியவனாக...... பகவான் பேசுவதில்லை,  அட பக்தியும் குறைவதுமில்லை,  காதலி பேசவுமில்லை,  என் காதல் குறைவதுமில்லை,   

அன்பினால் அடிமையாக்கிய - நீயும் நானும் அன்பே

Image
நமக்கு சும்மாவே நயன்தாராவை அப்படி பிடிக்கும், அதிலையும் ஒவ்வொரு சீன்லையும் இப்படி நடிச்சா.... Are You Okay Baby முதல் இறுதி வரை  முழு காதலையும், அன்பையும் கொட்டி தீர்த்திருக்கின்றனர் விஜய் சேதுபதியும், நயன்தாராவும்... இந்த பாடலுக்காகவே நேற்று படம் பாக்க போக வேண்டியதாயிற்று. இப்பாடல் இவ்வளவு அழகாக வர பாடுபட அனைவருக்கும் ஒரு சலுயூட் ஒவ்வொரு வரியும் அன்பின் ஆழத்தை அவ்வளவு அழகாக உணர்த்தி நிற்கின்றது. இருப்பினும் இவ்வரிகள் எனக்கு சம்திங் ஸ்பெஷல் தாய்மொழி போலே நீ வாழ்வாய் என்னில் உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்

தூவானம் தூவ தூவ மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன்

Image
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தொலை தூரத்தில் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட தூவானம் தூவ தூவ எனும் ரோமியோ ஜூலியட் பட பாடல் என்னை முணுமுணுக்க வைத்தது. அது மட்டுமல்லாமல் அப்பாடலினை வேலைத்தளத்தில் வேலை செய்யும் போது கேட்கவும் வைத்தது. வரிகள் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் இசைக்கேற்ற வரிகள் பாடலை மெருகேற்றியுள்ளதாகவே உணர்கிறேன். இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடலாசிரியர் தாமரை ஆகிய இருவரின் புரிந்துணர்வுக்கு ஒரு சபாஷ்.

கங்கை நதியே கங்கை நதியே – சோகங்களே வாழ்க்கையின் வேதமோ

Image
திடீரென இப்பாடல் இன்று நினைவுக்கு வந்தது. இப்பாடலில் வரும் கீழுள்ள வரிகள் வாழ்க்கையின் சோகப்பக்கங்களை புரட்டுவனாவாக அமைந்திருக்கின்றன… விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே விடியும் திசையென்ன இப்போது அதுவும் தெரியாதே நாளை எது வாழ்க்கை என்றே நீ சொல்லி நடப்பாயோ பாசம் தாழாமல் அங்கேயோ உள்ளம் துடிப்பாயோ காலம் செய்த கோலமின்று துன்பம் பொறுப்பாயோ சோகங்களே வாழ்க்கையின் வேதமோ …

யுவனின் இசையும் நா. முத்துகுமாரின் வரிகளின் சங்கமிப்பும் – ஆனந்த யாழை மீட்டுகிறாய்

Image
வாழ்கையில் கடந்து வரும் பாதையை எழுத்துக்களாக்கவே இவ்விணையத்தை ஆரம்பித்தேன். அதில் கற்கும் பாடங்கள், பார்க்கும் படங்களிலிருந்து அதிகமானவற்றை பகிரவே ஆசைப்பட்டேன். ஆனால் வேலைப்பழு காரணமாக பதிவேற்ற நேரம் அதிகமாக கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைக்கும் நேரங்களில் இத்தளம் பதிவேற்றலாம் என இன்றிலிருந்து நினைக்கின்றேன். அந்த வகையில் இன்று தங்க மீன்கள் படத்திலிருந்து “ ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி ” பாடலை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. யுவனின் சிறந்த பாடல்களில் நிச்சயமாக இதுவும் ஒன்று என்று நான் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் தேசிய விருது பெற்ற பாடல். தந்தை, மகளுக்கு இடையிலான உன்னத உறவை ஒரே பாட்டின் மூலம் சொல்லிய பெருமை ந. முத்துகுமாரை சாரும்…. நீங்களும் கேளுங்கள். எனக்கு பிடித்த வரிகள் “அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்” -பாடல்களை விமர்சனம் செய்யுமளவிற்கு நம்மக்கு அறிவு கிடையாது; இருப்பினும் பாட்டு பிடித்துள்ளதால் பகிரலாம் என்று நினைத்து பகிரந்துள்ளேன்… –