Posts

Showing posts with the label 96

96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்

Image
நேற்றைய தினம் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தினை எனது காதல் மனைவியுடன் பார்க்க கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் நேரான விமர்சனக்களை (positive review) பார்த்த பின்னரே இப்படத்திற்கு போகும் எண்ணம் எனக்குள் எழுந்தது. தங்கள் பாடசாலை பருவ காதலை இப்படத்தினூடாக அனுபவித்ததாக பலர் கருத்துக்கூறியிருந்தனர். என்னை பொறுத்தவரையில் எனது சொந்த வாழ்க்கையையும் தாண்டி பலரது தனிப்பட்ட விசயங்களையும் அறிந்தவன் என்ற வகையில் பள்ளி பருவ காதலையும் தாண்டி கல்லூரியில் காதலித்தவர்கள் முதல், வேலைத்தளத்தில் காதலித்தவர்கள் என வாழ்க்கையில் ஒரு முறையாவது காதலித்தவர்களுக்கு இப்படத்தில் வரும் பல காட்சிகள் தங்களது கடந்த வாழ்க்கையுடனும் மனதுடனும் ஒன்றித்து பயணிக்கும் என்பது நிதர்சனம். அதிலும் நீங்கள் இளையராஜாவில் பாடல்களுக்கு அடிமையென்றால் இப்படம் உங்கள் மனதில் பல நாட்களுக்கு நிழலாடும். எனக்கு பிடித்த காட்சிகளாக படத்தின் ஆரம்பத்தில் புகைப்படக்கலைக்கு “ அக்கணம் நமக்கு சொந்தம் ” என்று கூறப்படும் விளக்கம் குட்டி திரிஷா விஜய் சேதுபதி வகுப்பறையில் உடகார்வது.... Get together சமயத்தில் விஜய் சேதுபதி “யமுனை ஆற்றிலே” ப...