Posts

Showing posts with the label வாழ்க்கை தடம்

தலைக்கனம் இல்லா பணிவின் இலக்கணம்

Image
எம்மவர்கள் உயர் பதவிகளில் கடமையாற்றும் அலுவலகங்களுக்கு நாம் விருந்தாளியாக செல்லும் போது நிழற்படம் எடுப்பது வழக்கம்; அந்த வகையில் உவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த போது பதிவாளர் அல்ஹாஜ். கலாநிதி ஹிபத்துல் கரீம் அவர்களை நிழற்படம் எடுக்க அழைத்தேன்.  சரி என்று அழைத்தவர் என்னோடு எழுந்து நின்று போட்டோ எடுத்தார். ஆனால் நான் Facebook இல் பலரின் படங்களில் அலுவலகத்தின் மேலதிகாரி இருக்க விருந்தாளி நின்றே எடுத்திருப்பர். ஆனால் இங்கு நடந்த விடயம் எதிர் மாறானதாகவும் சிறப்பானதாகவும் இருந்தது. எம்மவர்கள் படம் எடுக்க உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் எழுந்து சமனாக நின்று எடுத்தால் நன்றாக இருக்கும்..  என்ன சேர் சிரிக்க தான் இல்லை..

இன்னுமொரு தாய், இன்னுமொரு குடும்பம்….

Image
சில உறவுகள் காலம் கடந்து கிடைத்தாலும், அவ்வுறவுகள் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என மனம் எண்ணும், இறைவனை பிரார்த்திக்கும். அந்தவகையில் அன்பு தோழி சிந்துஜாவின் நட்பினால் கிடைத்த அம்மா என்ற உறவும் சிந்துவின் குடும்பமும் இதிலடங்கும்.  சிந்துவின் அம்மாவை எனது சொந்த அம்மாவாகவும்,  குடும்பத்தை என் குடும்பமாகவே கருதுகின்றேன். என்றும் பாசத்துடன் இவ்வுறவு நிலைத்திருக்க இறைவனை பிரார்த்தித்தவனாய்..... Suhail Jamaldeen, Saranya Varathalingam, Chinthuja Varathalingam, Sivakala Varathalingam

என் ஆருயிர் தோழி சிந்துஜாவிற்கு திருமண நல்வாழ்த்துக்கள்

Image
நான் எப்பொழுதும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று தூய மனதுடன் நினைக்கும் எனது அன்புத்தோழி சிந்துஜாவுக்கு எனது மனம் கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள். உனது மனம் போல என்றும் நல்ல எதிர் காலம் காத்திருக்கின்றது என்ற நம்பிக்கையுடன்.. இவன் சுஹைல் ஜமால்தீன் (27.10.2018 – Wedding Date) Happy Wedded life my dear bestie Chinthuja Varathalingam. Have a successful wedded life. pic.twitter.com/qA33y1zgXy — Suhail Jamaldeen (@JSuhail) October 29, 2018

நட்பும் அன்பும் உணர்ச்சிகளுக்கு அடிமையானவை...

வாழ்க்கையில் பல நட்புக்கள் வந்து போகும்; சில நட்புக்கள் பல பாடங்கள் கற்பிக்கும். அப்பாடங்களில்  பல எவ்வளவு பணம் கொடுத்தாலும் கற்க முடியாதவையாக இருக்கும். அப்பாடவிதானங்களில் சில தியாயகங்களாக இருக்கலாம், சில துரோகங்களாக இருக்கலாம், சில ஏமாற்றங்களாக இருக்கலாம். சில நட்புக்கள் மீது நாம் அறிந்தோ அறியாமலோ அளவு கடந்த அன்பும், பாசமும் வைப்போம், அவர்கள் மீது உண்மையாக இருப்போம், அவர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக கேட்போம் நம்புவோம். அதே போல் அவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்போம். இன்நினைப்பு தான் பலருக்கு பாடம் கற்பிக்க தொடங்கும். நாம் எவ்வளவுக்கு அன்பும் பாசமும் வைக்கின்றோமோ அதே அளவு பாசம் நம் மீதும்  அவர்கள் வைக்க வேண்டும் என்று நினைப்பது மடமையன்றி வேறெதுவுமில்லை. அவர்கள் பக்கம் நின்று யோசிக்கும் போது அதற்கு சரியான காரணமும் இருக்கலாம்.   எதுவாயிருப்பினும் இப்படி நட்புகள் மீது கொண்ட நம்பிக்கை ஏமாற்றப்படும் போது மன உளைச்சலின் உச்சத்துக்கும் கொண்டு செல்லலாம். இரண்டு விதமாக நாம் இவ்வகையான பிரச்சினையை அணுகலாம். எமது நற்பு எமது அன்பையும், பாசத்தையும் புரிந்து கொள்ளா விட்டாலும் எவ்விதம...

என்னவளின் பாசப்பிணைப்பு

Image
On 22nd August 2018 (Eid ul Adha – Haj Festival)

இன்னுமொரு தாய் நீ

Image
உன் மடியில் தலை வைத்து தூங்கிய கணம் என்னுள் உணர்ந்தது தாயின் மடியில் தலை வைத்து தூங்கியது, பல இன்னல்களை இலகுவில் களைய உதவிய உன்மடி இனி கிடைக்குமோ! தாயின் மார்பில் தலை வைத்து அழுது சோர்வடைந்த ஞாபகம் எனக்கில்லை, உன் மார்பில் தலை சாய்ந்து என் சோர்வை நீக்கி இருக்கின்றேன்… தாயின் அன்பை எனக்களித்த அம்மார்பு இனி கிடைக்குமோ! தாய் கட்டளை இட்டு பல நாட்கள்; அதையும் தாண்டிய உன் அன்புக்கட்டளை அவ்வளவு இனிது… பல சாதனை ஜெயிக்க உதவிய அக்கட்டளைகளை இனி யார் இடுவார்! மொத்தத்தில் இன்னுமொரு தாயைப்போல் உன்னை உணர்கின்றேன்..

நிதியின் கல்யாணத்தின் போது முதலில் வேட்டி அணிந்த வேளை

Image
கடந்த 20/21.01.2018 ஆம் திகதி மீண்டும் ஒருமுறை யாழ்ப்பாணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. நண்பன் தயாநிதியின் திருமணத்திற்கு செல்லவே நண்பர் பட்டாளாம் புறப்பட்ட்து. அவ்வேளை வாழ்வின் முதன்முதலில் வேட்டி அணியும் வாய்ப்பு கிடைத்தது. வேட்டி தந்துதவிய சிவகுமாருக்கு நன்றிகள். வேட்டி அணிய ஆலோசனை வழங்கிய பெஸ்டி சிந்துஜாவுக்கு நன்றிகள்.

குற்றவாளி கூண்டு

மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு குற்றவாளி கூண்டில் நிக்கின்றான் குடும்ப தலைவன்….

Family Selfie this Eid (26.06.2017)

Image
சிறந்த ஒற்றுமையான குடும்பம் கிடைப்பது அல்லாஹ்வின் அருள். எனது குடும்பம் என்றும் ஒற்றுமையாக, சிறந்து வாழ வழி வகுப்பாயாக.. ஆமீன்..

தந்தை – மகன்

Image
எனது சமூக சேவையை பார்த்துவிட்டு எனது தாயார் உட்பட குடும்பத்தினர் “இவன் வாப்பாவ போலதான்” என்று ஏசுவது வழமை.  ஆனால் நான் அதை கொளரவாகவே கருதுவேன். எனது தந்தை தான் எனக்கு முன்னுதாரணம். எனது தந்தையின் பல குணாதிசயங்களை நான் கொண்டிருப்பது எனக்கு பெருமையே அந்த வகையில் அண்மையில் நடந்து முடிந்த ஷம்ஸ் தினத்தில் (ShamsDay2017) தற்செயலாக எடுக்கப்பட்ட புகைப்படமும், எனது தந்தை ஒரு சமயத்தில் பேசும் போது எடுக்கப்பட்ட புகைப்படமும்… “I have a lot of my father in me, and I’m proud about that”

புதிய இடம்; புதிய நண்பர்கள்

Image
“No matter how we plan, the fate of the life is beyond that” வாழ்கையில் மற்றுமொரு திருப்பமாக புதிய வேலை வாய்ப்பை பெற்று கடந்த 3.10.2016 அன்று பொறுப்போற்றேன். JeyLabs/Ceymplon எனும் நிறுவனத்தில் Associate Tech Lead – SharePoint and Office 365 எனும் பதவியை பெற்றுக்கொண்டுள்ளேன். எல்லாம் வல்ல இறைவன் என்றும் போல் துணை புரிய வேண்டும். என்னை நம்பி பொறுப்புக்களை அளித்திருக்கும் Jey Srikantha அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடன்..

ஐயூப் ஹாஜியார் பெரியப்பா

Image
மருதமுனையை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர்களுள் ஒருவர்.... இன்று வரை தர்மம் செய்து காட்டி வாழ்பவர்... எனது இன்னுமொரு பெரியப்பா.. ஐயூப் ஹாஜியார் இன்று (2015.06.14) பார்க்க சென்ற போது எடுக்கப்பட்ட படம்