Posts

Showing posts with the label Critics

காதலில் தோல்வி இருக்கலாம் ஆனால் ஏமாற்றம் இருக்க கூடாது - தொலைந்தே தனியே யாருமில்லை

Image
வேஷம் நீ…… பொய்கள் நீயே….. மாற்றம் நீ……நான் உடைந்தேனே….. (அவர்கள் மாறுவதில்லை; நாம் தான் நம்புகின்றோம்) படம்:  கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் பாடல்:  கனவே நீ நான் விழிக்கவில்ல

வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்

Image
சில நாட்களாக பாடல் வரிகளை அவதானித்து அதன் அர்த்தங்களை புரிய முற்பட்டிருந்தேன். அர்த்தம் புரிந்து பாடல் கேட்பதில் ஒரு தனி சுகம் இருப்பதையும் உணர்ந்திருந்தேன். அப்படி பாடல்களை யுடியூப்பில் கேட்கும் பொழுது சகா திரைப்பட (இன்னும் [30.10.2018] வெளிவரவில்லை) யாயும் ஞாயும் பாடல் இடை மறித்தது. இசை அற்புதமாக இருந்தது மட்டுமன்றி வரிகள் புரியாதவையாகவே இருந்தன. கேட்ட உடனேயே பிடித்தருந்தாலும் வசனங்ககளுக்கான கருத்துக்களை தேடியே தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பாடலில் ஆரம்ப வரிகள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நூல் 40 ஆவது பாடலிலிருந்து பெறப்பட்டுள்ளது.  எட்டுத்தொகை நூல்கள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு பாடல் யாயும் ஞாயும் யா ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே கருத்துரை என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை ...

கங்கை நதியே கங்கை நதியே – சோகங்களே வாழ்க்கையின் வேதமோ

Image
திடீரென இப்பாடல் இன்று நினைவுக்கு வந்தது. இப்பாடலில் வரும் கீழுள்ள வரிகள் வாழ்க்கையின் சோகப்பக்கங்களை புரட்டுவனாவாக அமைந்திருக்கின்றன… விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே விடியும் திசையென்ன இப்போது அதுவும் தெரியாதே நாளை எது வாழ்க்கை என்றே நீ சொல்லி நடப்பாயோ பாசம் தாழாமல் அங்கேயோ உள்ளம் துடிப்பாயோ காலம் செய்த கோலமின்று துன்பம் பொறுப்பாயோ சோகங்களே வாழ்க்கையின் வேதமோ …

வாழ்கைத் தத்துவத்தை உணர்த்தும் இன்னொரு மெலோடி – நதி போகும் கூழாங்கல் பயணம்

Image
சிலர் இளையராஜா பாட்டு கேட்டவுடன் பிடிக்கும் என்றும் ரஹ்மான் பாட்டு கேட்க கேட்க தான் பிடிக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் பாலா, தங்கர்பச்சன், மிஸ்கின் போன்ற இயக்குனர்களின் இசையமைப்பாளர்கள், மற்றும் அவர்களுடைய இசை தேர்ந்தேடுப்புகளும் சிறப்பானதாகவே இருந்து வருகின்றன. அவ்வாறான தேர்ந்தெடுப்புகள் கேட்டவுடனே பிடித்தும் போய் விடுகிறது. இயக்குனர் மிஸ்கினின் வெளிவரவிருக்கும் படமான பிசாசு திரைப்படத்தின் பாடலும் அவ்வாறுதான். கீழே உள்ள பாடலை கேட்டு பாருங்கள் உங்களுக்கே பிடிக்கும். எனக்கு பிடித்த வரிகள் வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு நம் கண்ணீர் இனிக்கட்டுமே

யுவனின் இசையும் நா. முத்துகுமாரின் வரிகளின் சங்கமிப்பும் – ஆனந்த யாழை மீட்டுகிறாய்

Image
வாழ்கையில் கடந்து வரும் பாதையை எழுத்துக்களாக்கவே இவ்விணையத்தை ஆரம்பித்தேன். அதில் கற்கும் பாடங்கள், பார்க்கும் படங்களிலிருந்து அதிகமானவற்றை பகிரவே ஆசைப்பட்டேன். ஆனால் வேலைப்பழு காரணமாக பதிவேற்ற நேரம் அதிகமாக கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைக்கும் நேரங்களில் இத்தளம் பதிவேற்றலாம் என இன்றிலிருந்து நினைக்கின்றேன். அந்த வகையில் இன்று தங்க மீன்கள் படத்திலிருந்து “ ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி ” பாடலை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. யுவனின் சிறந்த பாடல்களில் நிச்சயமாக இதுவும் ஒன்று என்று நான் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் தேசிய விருது பெற்ற பாடல். தந்தை, மகளுக்கு இடையிலான உன்னத உறவை ஒரே பாட்டின் மூலம் சொல்லிய பெருமை ந. முத்துகுமாரை சாரும்…. நீங்களும் கேளுங்கள். எனக்கு பிடித்த வரிகள் “அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்” -பாடல்களை விமர்சனம் செய்யுமளவிற்கு நம்மக்கு அறிவு கிடையாது; இருப்பினும் பாட்டு பிடித்துள்ளதால் பகிரலாம் என்று நினைத்து பகிரந்துள்ளேன்… –

ஏன் இளையதளபதி விஜய்????

Image
சில நிமிடங்களுக்கு முன்னர் இணைய உலாவின் போது ஒரு வசனத்தை வாசிக்க முடிந்தது. “ஹீரோயின் ஆட ஹீரோ பார்த்துக்கொண்டு இருந்தால் அது அஜித் படம், ஹீரோ ஆட ஹீரோயின் பார்த்துக்கொண்டு இருந்தால் அது விஜய் படம், ஹீரோவும் ஆடாமல் ஹீரோயினையும் ஆட விடாமல் இருந்தால் அது சூர்யா படம்” என்பதே அது. அறிவு பூர்வமானது கூட… அலுவலகத்தில் இந்நாட்களில் வேலை வெட்டி குறைவு என்பதாலும், பல இணையத்தளங்கள் முடக்கப்பட்டிருப்பதாலும், வடிவேலு சொல்லுவதை போல சும்மா இருப்பது ரொம்ப கஷ்டம் என்பதாலும் வந்த வினை தான் இந்த ஆக்கம். (உருப்படியா இருக்கோ இல்லையோ நீங்களும் இப்ப வேலை வெட்டியை விட்டு விட்டு வாசிங்க போஸ்…..) விமர்சனங்கள் எழுத ஆசையாக இருப்பதனால் நண்பன் படம் பற்றியும் எழுத வேண்டும் என நினைத்தேன்; ஆனாலும் இயலவில்லை. பார்த்தது முதல் நாள் காட்சி என்பதால் ரசிகர் கூட்டத்தில் (எங்களை போல) கை தட்டல்களும், சிரிப்பொலிகளும் விண்ணை மட்டுமல்ல எங்கள் காதையும் சேர்த்து பிளந்தது. இதனால் படத்தை முழுவதுமாக இரசிக்க முடியவில்லை. திரும்பவும் படத்தை பார்த்து எழுத வினைகிறேன். எப்பொழுதுமே சிலர் எங்களை (விஜய் ரசிகர்களை) இரசனை இல்லாதவர்கள் ...

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

Image
Original Post Here முக்கிய பல வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் Facebook என்று அழைக்கப்படும் முகப்புத்தகத்தில் Login செய்து நேரத்தை வீண்விரயம் செய்பவனாகவும். மருதமுனையை ஏதோ எங்களால் (நானும், எனது நண்பர் அணியும்) முடிந்த அளவிற்கு  Maruthamunai Online  மூலமாக உலகெங்கும் வீயாபிக்கச் செய்தது மட்டுமல்லாமல் தினமும் நடக்கும் சம்பவங்களை முடிந்தளவிற்கு ஒலி ஒளி வடிவில் உலகிற்கு எடுத்துச் செல்ல பங்களிப்பு செய்தவர்களில் ஒருவன் என்ற வகையிலும் முகப்புத்தகத்தில் மருதமுனை மக்கள் எனும் தலைப்பில் ஒரு சிறிய ஆகக்கத்தை எழுத தகுதியுடையவன் என்று நினைத்து இந்த ஆக்கத்தினை எழுத விளைகின்றேன். இவ்வாக்கம்  Maruthamunai Online  இல் பதிவேற்றம் செய்யக்கூடியதாக இருந்தாலும் இவ் எண்ணங்கள் Maruthamunai Online நிர்வாகத்தின் சிந்தனைகளாகவோ ஆசிரியர் பீடத்தின் சிந்தனைகளாகவோ யாரும் கருதிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக எனது தனிப்பட்ட Blog இல் பதிவேற்றம் செய்கிறேன். இது எனது தனிப்பட்ட சிந்தனை மட்டுமே என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முகப் புத்தகத்தில் தினந்தோறும் பல புதிய முகங்கள் இணைத்த வண்ண...

வீரகேசரிக்கு வேலாயுதத்தின் பதில்

Original Post: Click Here இலங்கையின் பழம் பெரும் பத்திரிகை, பலர் விரும்பி வாசிக்கும் பத்திரிகை மற்றும் ஊடகவியல் சார்ந்த பல விருதுகளை வென்ற நாளிதழ் வீரகேசரி என்றால் அது மிகையாகாது. வீரகேசரி நாளிதழ் இன்றைய காலத்துக்கும் தொழினுட்பத்துக்கும் ஏற்ப தனக்கான இணைய முகவரியில் உலாவருகின்றமை யாவரும் அறிந்ததே.ஆனால் இவ் இணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளமை கவலைக்குரியதே .நேற்று "வேலாயுதம் திடுக்கிடும் தகவல்" எனும் தலைப்பில் வெளியான கட்டுரையே இவ் அச்சத்துக்கும் கேள்விக்குறியாகியுள்ள வீரகேசரியின் நம்பகத்தன்மைக்கும் காரணமாகும். http://www.virakesari.lk/cinema/head_view.asp?key_c=௩௩௦ எனும் இணய முகவரியில் வாசிக்கக் கிடைத்த ஆக்கத்தின் ஸ்க்ரீன் ஷாட் இதோ இக்கட்டுரையின் இரண்டாம் பந்தியில் "தற்போது படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்த நிலையில் இப்படத்தின் ஒரு காட்சி கூட எந்த திரையரங்கிலும் இல்லையாம். " என வேலாயுதம் படத்தினை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை நாம் இணையத்தில் தேடிப்பார்த்த போது ஒன்லைன் டிக்கெட்டின் மூலமாக இப்பொழுது கூட சில திரையங்குகளில் காட்சிக்கு...