மதியாதோர் தலைவாசல் மிதியாதே
இனம், மதம், தொழில், பிறப்பு, பால் வேறுபாடுகளின்றி ஒரு சக மனிதனை மனிதனாக மதிக்க கற்று கொள்ள வேண்டும். எவராயினும் எவ்வகையான உறவாயினும் நம்மை மதிக்காதவிடத்து அவரிடம் உதவியோ அல்லது ஏதாவது நலனோ கேட்டு அவரின் வாசற்படி மிதியாது எமது அறிவையும் ஆற்றலையும் அதிகரித்து கொண்டு பிறருக்கும் உதவி செய்து வாழ பழகிக்கொள்ள வேண்டும்.