Posts

Showing posts from July, 2011

அந்நாள் முதல்

உன்  கிறுக்கல்கள்  ஓவியங்களாக, உன்  பேச்சுக்கள் கவிதைகளாக, உன் வார்த்தைகள் இலக்கியங்களாக, மாறிய அந்நாள் முதல் வரைந்தேன்  ஓவியமாக, எழுதினேன் கவிதைகளாக, படைத்தேன் இலக்கியமாக உன்னை......

எனது பார்வையில் “தெய்வத்திருமகள்”

என்னதான் Final Year Project என்று சொன்னாலும் அந்த Busyக்குள்ளேயும் theater க்கு போய் படம் பார்க்கிறது சுகம்தான். Trailer பார்த்ததும் போகக்கூடாது என நினைத்த படம் தெய்வத்திருமகள். ஏனென்றால் நடிப்பு என்று சொல்லிவிட்டு விக்ரமின் மாஸ் Image இணை கெடுத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன் மற்றும் விக்ரமை அவ்வாறு பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை.ஆனாலும் internetஇல் விமர்சனங்களை வாசித்து சரி போவோம் என நானும் எனது APIIT சங்க நண்பர்களும் முடிவெடுத்தோம். இப்பொழுது விடயத்துக்கு போவோம். நான் இங்கு திரைக்கதையை கூற வரவில்லை; ஏனெனில் எனக்கு திரைக்கதை கூற வராது. ‘தெய்வத்திருமகள்’ ஒட்டுமொத்த நடிகர்களது நடிபுத்திறமைக்கு தீனி போட்ட படம். விக்ரம் – அவரின் நடிப்புத்திறமையை பற்றி சொல்லவே தேவையில்லை; மனநலம் குன்றியவராக நடித்திருந்தார் இல்லை இல்லை அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார். சந்தானம் – சமீப காலங்களில் Comedyயில் கலக்கி கொண்டிருப்பவர் விவேக் வடிவேலு போன்றவர்களில் இடத்தை முந்தியிருந்தார்; இதிலும் அவரது காமெடி சரவெடி. அனுஷ்கா – நான் பார்த்த படங்களில் (சிங்கம், வேட்டைக்காரன்) ஏதோ பாடல...