ஏன் இளையதளபதி விஜய்????
சில நிமிடங்களுக்கு முன்னர் இணைய உலாவின் போது ஒரு வசனத்தை வாசிக்க முடிந்தது. “ஹீரோயின் ஆட ஹீரோ பார்த்துக்கொண்டு இருந்தால் அது அஜித் படம், ஹீரோ ஆட ஹீரோயின் பார்த்துக்கொண்டு இருந்தால் அது விஜய் படம், ஹீரோவும் ஆடாமல் ஹீரோயினையும் ஆட விடாமல் இருந்தால் அது சூர்யா படம்” என்பதே அது. அறிவு பூர்வமானது கூட… அலுவலகத்தில் இந்நாட்களில் வேலை வெட்டி குறைவு என்பதாலும், பல இணையத்தளங்கள் முடக்கப்பட்டிருப்பதாலும், வடிவேலு சொல்லுவதை போல சும்மா இருப்பது ரொம்ப கஷ்டம் என்பதாலும் வந்த வினை தான் இந்த ஆக்கம். (உருப்படியா இருக்கோ இல்லையோ நீங்களும் இப்ப வேலை வெட்டியை விட்டு விட்டு வாசிங்க போஸ்…..) விமர்சனங்கள் எழுத ஆசையாக இருப்பதனால் நண்பன் படம் பற்றியும் எழுத வேண்டும் என நினைத்தேன்; ஆனாலும் இயலவில்லை. பார்த்தது முதல் நாள் காட்சி என்பதால் ரசிகர் கூட்டத்தில் (எங்களை போல) கை தட்டல்களும், சிரிப்பொலிகளும் விண்ணை மட்டுமல்ல எங்கள் காதையும் சேர்த்து பிளந்தது. இதனால் படத்தை முழுவதுமாக இரசிக்க முடியவில்லை. திரும்பவும் படத்தை பார்த்து எழுத வினைகிறேன். எப்பொழுதுமே சிலர் எங்களை (விஜய் ரசிகர்களை) இரசனை இல்லாதவர்கள் ...