Posts

Showing posts from September, 2015

எமது பயணத்தில் ஒரு உறவு – நூலகர் மர்ஹும் அப்துல் மஜீத்

கடந்த 2015-09-15 அன்று காலம் சென்ற அப்துல் மஜீத் (நூலகர்) அவர்கள் மருதமுனை ஒன்லைனின் பயணத்தில் எவ்வாறு இணைந்திருந்தார், அவருக்கும் மருதமுனை ஒன்லைனுக்கும் இடையிலான உறவு எவ்வாறு இருந்தது என்பதை நினைவூட்டுவதே இக்கட்டுரை நோக்கமாக இருக்கின்றது. மருதமுனை ஒன்லைனின் வளர்ச்சிக்கு நூலகர் மஜீத் அவர்களின் வளர்ச்சி முக்கியமானதொன்று என்பது பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் செய்த உதவியை நினைவு கூர்வது எனது கடமையாக இருக்கின்றது. மருதமுனை ஒன்லைனின் ஆரம்ப காலத்தில் நானும், என்னுடன் தோள் கொடுத்து உழைத்த முஹம்மது அஸ்றி அவர்களும் மருதமுனையின் வரலாற்றை ஆவணமாக்க முனைந்திருந்தோம். அந்த வகையில் அதன் ஒரு பகுதியாக மருதமுனையின் பொது ஸ்தாபனக்களின் வரலாற்றை ஒன்று சேர்க்க எண்ணினோம். அச்சந்தர்ப்பத்தில் பலரது ஆலோசைனைக்கமைய நூலகர் மஜீத் அவர்களை நானும், முஹம்மது அஸ்றி சந்தித்தோம். நான் நினைக்குமளவில் இது நடந்தது 2009-2010 காலப்பகுதியிலாகும். நாங்கள் எம்மை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே தேநீர் உபசாரமளித்ளித்தமை அவருடைய விருந்தோம்பல் பண்பை பறைசாற்றியது. இன்றிருப்பது போன்று மருதமுனை ஒன்லைன் அவ்வளவாக பிரசித்தி பெறாத கால...