எமது பயணத்தில் ஒரு உறவு – நூலகர் மர்ஹும் அப்துல் மஜீத்

கடந்த 2015-09-15 அன்று காலம் சென்ற அப்துல் மஜீத் (நூலகர்) அவர்கள் மருதமுனை ஒன்லைனின் பயணத்தில் எவ்வாறு இணைந்திருந்தார், அவருக்கும் மருதமுனை ஒன்லைனுக்கும் இடையிலான உறவு எவ்வாறு இருந்தது என்பதை நினைவூட்டுவதே இக்கட்டுரை நோக்கமாக இருக்கின்றது.

மருதமுனை ஒன்லைனின் வளர்ச்சிக்கு நூலகர் மஜீத் அவர்களின் வளர்ச்சி முக்கியமானதொன்று என்பது பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் செய்த உதவியை நினைவு கூர்வது எனது கடமையாக இருக்கின்றது.

மருதமுனை ஒன்லைனின் ஆரம்ப காலத்தில் நானும், என்னுடன் தோள் கொடுத்து உழைத்த முஹம்மது அஸ்றி அவர்களும் மருதமுனையின் வரலாற்றை ஆவணமாக்க முனைந்திருந்தோம். அந்த வகையில் அதன் ஒரு பகுதியாக மருதமுனையின் பொது ஸ்தாபனக்களின் வரலாற்றை ஒன்று சேர்க்க எண்ணினோம்.

அச்சந்தர்ப்பத்தில் பலரது ஆலோசைனைக்கமைய நூலகர் மஜீத் அவர்களை நானும், முஹம்மது அஸ்றி சந்தித்தோம். நான் நினைக்குமளவில் இது நடந்தது 2009-2010 காலப்பகுதியிலாகும்.

நாங்கள் எம்மை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே தேநீர் உபசாரமளித்ளித்தமை அவருடைய விருந்தோம்பல் பண்பை பறைசாற்றியது. இன்றிருப்பது போன்று மருதமுனை ஒன்லைன் அவ்வளவாக பிரசித்தி பெறாத காலப்பகுதி, மருதமுனையைச் சேர்ந்த சிலரே பேஸ்புக்கிலும் இணைந்திருந்தனர். எனினும் நூலகர் மஜீத் அவர்களிடம் சென்று பேசும் போது, மருதமுனை ஒன்லைன் பற்றியும், இணையத்தை பற்றியும், தகவல் தொழிநுட்பத்தைப் பற்றியும் விபரிப்பது இலகுவாக இருந்தது. ஏனெனில் அவர் காலத்திற்கு ஏற்ப அறிவை மேம்படுத்தி புதுப்பித்திருந்தார்.

எங்களது கோரிக்கையை செவியுற்ற நூலகர் எமக்கு  இரண்டு நாட்களில் வருமாறும் எழுத்து வடிவில் தருவதாக வாக்குறுதியளித்தார், அந்த வாக்குறுதி அவ்வாறே காப்பற்றினார். அது எமது தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பலர் விரும்பி வாசித்த வரலாறாகவும் அது விசேடத்துவம் பெற்றது. மிக விரைவில் அவ் வரலாறு புதிய வடிவில் பிரசுரமாக தேவையான நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்படவிருக்கின்றது இன்ஷா அல்லாஹ்.

மர்ஹும் மஜீத் அவர்கள் கரப்பந்து விளையாட்டு பிரியராகக் காணப்பட்டார். மருதமுனை ஒன்லைனால் 13.04.2013 அன்று கரப்பந்து சுற்றுப் போட்டி ஒன்றினை நடாத்தியிருந்தது. அதில் ஒரு சில போட்டிகளுக்கு அவர் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். எமது குறுகிய கால அழைப்பை  அங்கே வருகை தந்து சிறப்பித்தது இன்னும் எம்மால் மறக்க முடியாத ஒரு சம்பவமாகும்.

எமது பயணத்தில் இனிமையுடன் இணைந்திருந்த மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தை அருளவேண்டும். ஆமீன்.


மருதமுனை ஒன்லைன் அணியினர் சார்பாக

சுகைல் ஜமால்தீன்
ஸ்தாபகத் தலைவர்
மருதமுனை ஒன்லைன்

Comments

Popular posts from this blog

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

அன்பினால் அடிமையாக்கிய - நீயும் நானும் அன்பே

96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்