Posts

Showing posts from August, 2018

Eid ul Adha – Haj Festival 2018 (22.08.2018) photos

Image

என்னவளின் பாசப்பிணைப்பு

Image
On 22nd August 2018 (Eid ul Adha – Haj Festival)

எது சாதனை??!!

Image
சிறு வயது முதல் (தரம் 4 முதல்) கல்வி நோக்கத்திற்காக சொந்த வீட்டை விட்டு பிரிந்து ஹொஸ்டலில் தங்கியதால் என்னவோ Home Sick எனும் வீட்டு ஏக்கம் வருவது மிக அரிது. எனக்கு விபரம் தெரிந்து எனது 30 வருட இவ்வுலக வாழ்க்கையில் கடந்த 3-4 வாரங்கள் மிகவும் சோர்வடைந்த நிலையிலே கழிந்தது, ஏன் நான் மனதளவில் உடைந்து விட்டேன் என்றே சொல்லலாம். தொடர் வேலைப்பழுவையும் தாண்டி எனது மகளை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வாட்டியது. இறுதியாக கடந்த 29.07.2018 ஆம் திகதி 5 நிமிடங்களே மகளுடன் இருக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அச்சமயம் அவளது பார்வை என்னால் மறக்கவே முடியாது!! மற்றவர்களால் எப்பொழுதும் முரடனாய் பார்க்கப்படும் நான் மனமுடைந்து காணப்பட்டேன். எனக்குள் இப்படியொரு மெல்லிய மனம் இருக்கின்றது என்பதை நானே 30 வயதில் தான் புரிந்து கொண்டேன். தாய்க்கு, தாரத்திற்கு, சகோதரத்திற்கு, பிள்ளைகளுக்கு என்று ஓடி ஓடி உழைக்கின்றோம். கடைசியில் அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கை என்னமோ நாள் கணக்கு என்று நினைக்கும் போது மிகவும் வேதனையளிக்கின்றது. சில நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு 30 வயசாகிறது எதை சாதிச்சம், எதை கிழிச்சம் என்று. இங்கே நாமு...

இன்னுமொரு தாய் நீ

Image
உன் மடியில் தலை வைத்து தூங்கிய கணம் என்னுள் உணர்ந்தது தாயின் மடியில் தலை வைத்து தூங்கியது, பல இன்னல்களை இலகுவில் களைய உதவிய உன்மடி இனி கிடைக்குமோ! தாயின் மார்பில் தலை வைத்து அழுது சோர்வடைந்த ஞாபகம் எனக்கில்லை, உன் மார்பில் தலை சாய்ந்து என் சோர்வை நீக்கி இருக்கின்றேன்… தாயின் அன்பை எனக்களித்த அம்மார்பு இனி கிடைக்குமோ! தாய் கட்டளை இட்டு பல நாட்கள்; அதையும் தாண்டிய உன் அன்புக்கட்டளை அவ்வளவு இனிது… பல சாதனை ஜெயிக்க உதவிய அக்கட்டளைகளை இனி யார் இடுவார்! மொத்தத்தில் இன்னுமொரு தாயைப்போல் உன்னை உணர்கின்றேன்..