Posts

Showing posts from October, 2018

வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்

Image
சில நாட்களாக பாடல் வரிகளை அவதானித்து அதன் அர்த்தங்களை புரிய முற்பட்டிருந்தேன். அர்த்தம் புரிந்து பாடல் கேட்பதில் ஒரு தனி சுகம் இருப்பதையும் உணர்ந்திருந்தேன். அப்படி பாடல்களை யுடியூப்பில் கேட்கும் பொழுது சகா திரைப்பட (இன்னும் [30.10.2018] வெளிவரவில்லை) யாயும் ஞாயும் பாடல் இடை மறித்தது. இசை அற்புதமாக இருந்தது மட்டுமன்றி வரிகள் புரியாதவையாகவே இருந்தன. கேட்ட உடனேயே பிடித்தருந்தாலும் வசனங்ககளுக்கான கருத்துக்களை தேடியே தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பாடலில் ஆரம்ப வரிகள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நூல் 40 ஆவது பாடலிலிருந்து பெறப்பட்டுள்ளது.  எட்டுத்தொகை நூல்கள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு புறநானூறு பாடல் யாயும் ஞாயும் யா ராகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் செம்புல பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே கலந்தனவே கருத்துரை என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை ...

இன்னுமொரு தாய், இன்னுமொரு குடும்பம்….

Image
சில உறவுகள் காலம் கடந்து கிடைத்தாலும், அவ்வுறவுகள் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என மனம் எண்ணும், இறைவனை பிரார்த்திக்கும். அந்தவகையில் அன்பு தோழி சிந்துஜாவின் நட்பினால் கிடைத்த அம்மா என்ற உறவும் சிந்துவின் குடும்பமும் இதிலடங்கும்.  சிந்துவின் அம்மாவை எனது சொந்த அம்மாவாகவும்,  குடும்பத்தை என் குடும்பமாகவே கருதுகின்றேன். என்றும் பாசத்துடன் இவ்வுறவு நிலைத்திருக்க இறைவனை பிரார்த்தித்தவனாய்..... Suhail Jamaldeen, Saranya Varathalingam, Chinthuja Varathalingam, Sivakala Varathalingam

என் ஆருயிர் தோழி சிந்துஜாவிற்கு திருமண நல்வாழ்த்துக்கள்

Image
நான் எப்பொழுதும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று தூய மனதுடன் நினைக்கும் எனது அன்புத்தோழி சிந்துஜாவுக்கு எனது மனம் கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள். உனது மனம் போல என்றும் நல்ல எதிர் காலம் காத்திருக்கின்றது என்ற நம்பிக்கையுடன்.. இவன் சுஹைல் ஜமால்தீன் (27.10.2018 – Wedding Date) Happy Wedded life my dear bestie Chinthuja Varathalingam. Have a successful wedded life. pic.twitter.com/qA33y1zgXy — Suhail Jamaldeen (@JSuhail) October 29, 2018

நட்பும் அன்பும் உணர்ச்சிகளுக்கு அடிமையானவை...

வாழ்க்கையில் பல நட்புக்கள் வந்து போகும்; சில நட்புக்கள் பல பாடங்கள் கற்பிக்கும். அப்பாடங்களில்  பல எவ்வளவு பணம் கொடுத்தாலும் கற்க முடியாதவையாக இருக்கும். அப்பாடவிதானங்களில் சில தியாயகங்களாக இருக்கலாம், சில துரோகங்களாக இருக்கலாம், சில ஏமாற்றங்களாக இருக்கலாம். சில நட்புக்கள் மீது நாம் அறிந்தோ அறியாமலோ அளவு கடந்த அன்பும், பாசமும் வைப்போம், அவர்கள் மீது உண்மையாக இருப்போம், அவர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக கேட்போம் நம்புவோம். அதே போல் அவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்போம். இன்நினைப்பு தான் பலருக்கு பாடம் கற்பிக்க தொடங்கும். நாம் எவ்வளவுக்கு அன்பும் பாசமும் வைக்கின்றோமோ அதே அளவு பாசம் நம் மீதும்  அவர்கள் வைக்க வேண்டும் என்று நினைப்பது மடமையன்றி வேறெதுவுமில்லை. அவர்கள் பக்கம் நின்று யோசிக்கும் போது அதற்கு சரியான காரணமும் இருக்கலாம்.   எதுவாயிருப்பினும் இப்படி நட்புகள் மீது கொண்ட நம்பிக்கை ஏமாற்றப்படும் போது மன உளைச்சலின் உச்சத்துக்கும் கொண்டு செல்லலாம். இரண்டு விதமாக நாம் இவ்வகையான பிரச்சினையை அணுகலாம். எமது நற்பு எமது அன்பையும், பாசத்தையும் புரிந்து கொள்ளா விட்டாலும் எவ்விதம...

96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்

Image
நேற்றைய தினம் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தினை எனது காதல் மனைவியுடன் பார்க்க கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் நேரான விமர்சனக்களை (positive review) பார்த்த பின்னரே இப்படத்திற்கு போகும் எண்ணம் எனக்குள் எழுந்தது. தங்கள் பாடசாலை பருவ காதலை இப்படத்தினூடாக அனுபவித்ததாக பலர் கருத்துக்கூறியிருந்தனர். என்னை பொறுத்தவரையில் எனது சொந்த வாழ்க்கையையும் தாண்டி பலரது தனிப்பட்ட விசயங்களையும் அறிந்தவன் என்ற வகையில் பள்ளி பருவ காதலையும் தாண்டி கல்லூரியில் காதலித்தவர்கள் முதல், வேலைத்தளத்தில் காதலித்தவர்கள் என வாழ்க்கையில் ஒரு முறையாவது காதலித்தவர்களுக்கு இப்படத்தில் வரும் பல காட்சிகள் தங்களது கடந்த வாழ்க்கையுடனும் மனதுடனும் ஒன்றித்து பயணிக்கும் என்பது நிதர்சனம். அதிலும் நீங்கள் இளையராஜாவில் பாடல்களுக்கு அடிமையென்றால் இப்படம் உங்கள் மனதில் பல நாட்களுக்கு நிழலாடும். எனக்கு பிடித்த காட்சிகளாக படத்தின் ஆரம்பத்தில் புகைப்படக்கலைக்கு “ அக்கணம் நமக்கு சொந்தம் ” என்று கூறப்படும் விளக்கம் குட்டி திரிஷா விஜய் சேதுபதி வகுப்பறையில் உடகார்வது.... Get together சமயத்தில் விஜய் சேதுபதி “யமுனை ஆற்றிலே” ப...