வரிகளாலும் இசையாலும் மெய்மறக்கடிக்கும் - யாயும் ஞாயும்
சில நாட்களாக பாடல் வரிகளை அவதானித்து அதன் அர்த்தங்களை புரிய முற்பட்டிருந்தேன். அர்த்தம் புரிந்து பாடல் கேட்பதில் ஒரு தனி சுகம் இருப்பதையும் உணர்ந்திருந்தேன்.
அப்படி பாடல்களை யுடியூப்பில் கேட்கும் பொழுது சகா திரைப்பட (இன்னும் [30.10.2018] வெளிவரவில்லை) யாயும் ஞாயும் பாடல் இடை மறித்தது. இசை அற்புதமாக இருந்தது மட்டுமன்றி வரிகள் புரியாதவையாகவே இருந்தன. கேட்ட உடனேயே பிடித்தருந்தாலும் வசனங்ககளுக்கான கருத்துக்களை தேடியே தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.
பாடலில் ஆரம்ப வரிகள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நூல் 40 ஆவது பாடலிலிருந்து பெறப்பட்டுள்ளது.
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
அகநானூறு
புறநானூறு
பாடல்
யாயும் ஞாயும்
யா ராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர்
செம்புல பெயல்நீர் போல்
அன்புடை நெஞ்சம்தாம்
கலந்தனவே கலந்தனவே
கருத்துரை
என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன. (அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ, அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)
சொல்பொருள் விளக்கம்
யாயும்-என் தாயும், ஞாயும்- உன் தாயும், யார் ஆகியரோ- யாருக்கு யார் உறவினர், எந்தையும்- என் தந்தையும், நுந்தையும்- உன் தந்தையும்,எம்முறை- எந்த முறையில், கேளிர்- உறவினர்,யானும் நீயும் –நானும்- நீயும் நானும், எவ்வழி- எந்த உறவின் வழியாக, அறிதும்- அறிந்து கொண்டோம்? செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம்– அன்பான நெஞ்சங்கள், தாம் – தாமாகவே(யாதொரு உறவுமின்றி), கலந்தனவே- கலந்துகொண்டனவே.
எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அவ்வாறே தலைவனின் அன்பினையும் தலைவி ஏற்றாள். இங்கே நிலம்-தலைவி, நீர்- தலைவன் . (http://siragu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-40-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/)
உங்கள் கவி ரசனை சிறப்பு
ReplyDelete