வீரகேசரிக்கு வேலாயுதத்தின் பதில்

Original Post: Click Here

இலங்கையின் பழம் பெரும் பத்திரிகை, பலர் விரும்பி வாசிக்கும் பத்திரிகை மற்றும் ஊடகவியல் சார்ந்த பல விருதுகளை வென்ற நாளிதழ் வீரகேசரி என்றால் அது மிகையாகாது. வீரகேசரி நாளிதழ் இன்றைய காலத்துக்கும் தொழினுட்பத்துக்கும் ஏற்ப தனக்கான இணைய முகவரியில் உலாவருகின்றமை யாவரும் அறிந்ததே.ஆனால் இவ் இணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளமை கவலைக்குரியதே .நேற்று "வேலாயுதம் திடுக்கிடும் தகவல்" எனும் தலைப்பில் வெளியான கட்டுரையே இவ் அச்சத்துக்கும் கேள்விக்குறியாகியுள்ள வீரகேசரியின் நம்பகத்தன்மைக்கும் காரணமாகும்.

http://www.virakesari.lk/cinema/head_view.asp?key_c=௩௩௦ எனும் இணய முகவரியில் வாசிக்கக் கிடைத்த ஆக்கத்தின் ஸ்க்ரீன் ஷாட் இதோ

இக்கட்டுரையின் இரண்டாம் பந்தியில் "தற்போது படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்த நிலையில் இப்படத்தின் ஒரு காட்சி கூட எந்த திரையரங்கிலும் இல்லையாம். " என வேலாயுதம் படத்தினை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மையை நாம் இணையத்தில் தேடிப்பார்த்த போது ஒன்லைன் டிக்கெட்டின் மூலமாக இப்பொழுது கூட சில திரையங்குகளில் காட்சிக்கு ஆசனங்களை முன் பதிவு செய்யக்கூடிய வசதி காணப்படுகின்றது. இதற்கு உதயம் மற்றும் PVR சினிமாஸ் போன்ற திரையரங்க உத்தியோகபூர்வ இணையங்களில் ஒன்லைன் டிக்கெட்டின் வசதி இருக்கும் சான்றே போதுமானதாகும்.


இவ்வாறு வேலாயுதம் படத்துக்கு  ஒன்லைன் டிக்கெட்டின் மூலம் திரையரங்குகளில் ஆசனம் பதிவு வசதி செய்யப்பட்டிருக்கும் போது மேற்படி வீரகேசரி இணையம் எவ்வாறு அடிப்படை உண்மையற்ற ஆக்கத்தை வெளியிட முடியும்... வீரகேசரியின் நம்பகத்தன்மைதான் என்ன??!!!!

அது மட்டுமல்லாது பீகைண்ட்வூட்ஸ் பாக்ஸ் ஆபீஸ் கலக்சனில் No. Shows in Chennai over this weekend: 24 என குறிப்படப்பட்டுள்ளது. வீரகேசரி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது உண்மையாயின் சினிமா செய்திகளையே பிரதானமாக்கி இயங்கும் இவர்களது (Behindwoods) தகவல் பொய்யா??. டிசம்பர் 16 ம் திகதியிலிருந்து 18 திகதி வரைக்கான பாக்ஸ் ஆபீஸ் கலக்சனின் ஸ்க்ரீன் ஷாட் இதோ....



மேற்படி ஸ்க்ரீன் ஷாட்டிலேயே Velayudham is the surprise Diwali Winner என குறிப்பிடப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் இக் கட்டுரையின் மூன்றாம் பந்தியில் "அத்துடன் சுமார் 50 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரையில் 40 கோடியினையே வசூலாக பெற்றிருக்கிறதாம்." என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் வசூல் முதல் 5 நாட்களில் பெற்ற வசூல் என இக் கட்டுரையை புனைந்த எழுத்தாளருக்கு தெரியாமல் போனது வருத்தமளிக்கிறது. இதை நான் சொல்லவில்லை...

சொல்கிறது.

அதே பந்தியில் அடுத்த வரி "இனியும் இப்படத்தின் மூலம் வருமானம் ஈட்டமுயாது என்ற நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெரும் மனக் கவலையில் இருக்கிறாராம்". என்னமோ வீரகேசரி எழுத்தாளரிடம் வந்து ஆஸ்கார் ரவிச்சந்திரன் அழுது கண்ணீர் வடித்ததை போல கதை புனைந்து இருக்கிறார். தோல்விப்படம் என கூறப்பட்ட (இளைய தளபதி விஜயினையும் விஜயின் மாசினையும் கெடுக்க நினைப்பவர்களால் ) சச்சினை தயாரித்த கலைப்புலி தாணுவே விஜயின் அடுத்த படமான துப்பாக்கியையும் மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கிறார் என்பது வேறு கதை.

இக்கதையை புனைந்த எழுத்தாளர் மிக சாதுரியமான முறையில் அனைத்து வசனத்தையும் "யாம்"," றாராம்" என திடமில்லாமலே முடித்துள்ளார். இவர் வீரகேசரியனை கொண்டு விஜயை கலாக்கிறாராம்.

நாம் கூறிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான் வீரகேசரி தன் நன் மதிப்பை கெடுக்காமல், உண்மையான செய்திகள், ஆக்கங்களை மட்டுமே பிரசுக்க வேண்டும். இனியாவது சொந்த செலவில் வீரகேசரி சூனியம் வைக்காது என நம்புவதோடு, நாளிதழ் மூலம் சேவையாற்றி நன் மதிப்பை வென்ற வீரகேசரி இணையம் மூலமும் சேவையாற்ற வேண்டும் எனவும் வேண்டுகிறோம்.

இது வரை காலமும் விஜய் - த மாஸ் இனி விஜய் த மாஸ் வித் த கிளாஸ்.

Until today Vijay - The Mass; Here after Vijay - The Mass with the Class

For more:

http://www.dnaindia.com/india/report_velayudhams-victory-over-7aam-arivu-surprises-all_1604999
http://entertainment.oneindia.in/tamil/news/2011/ra-one-box-office-velayudham-aam-arivu-311011.html
http://www.indiaglitz.com/channels/tamil/article/73224.html
http://www.sify.com/movies/boxoffice.php?id=14982616&cid=13525926
http://behindwoods.com/tamil-movie-news-1/nov-11-01/7aum-arivu-velayutham-01-11-11.html

Comments

Popular posts from this blog

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

அன்பினால் அடிமையாக்கிய - நீயும் நானும் அன்பே

96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்