யுவனின் இசையும் நா. முத்துகுமாரின் வரிகளின் சங்கமிப்பும் – ஆனந்த யாழை மீட்டுகிறாய்

வாழ்கையில் கடந்து வரும் பாதையை எழுத்துக்களாக்கவே இவ்விணையத்தை ஆரம்பித்தேன். அதில் கற்கும் பாடங்கள், பார்க்கும் படங்களிலிருந்து அதிகமானவற்றை பகிரவே ஆசைப்பட்டேன். ஆனால் வேலைப்பழு காரணமாக பதிவேற்ற நேரம் அதிகமாக கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைக்கும் நேரங்களில் இத்தளம் பதிவேற்றலாம் என இன்றிலிருந்து நினைக்கின்றேன்.
அந்த வகையில் இன்று தங்க மீன்கள் படத்திலிருந்து “ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி” பாடலை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. யுவனின் சிறந்த பாடல்களில் நிச்சயமாக இதுவும் ஒன்று என்று நான் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் தேசிய விருது பெற்ற பாடல்.
தந்தை, மகளுக்கு இடையிலான உன்னத உறவை ஒரே பாட்டின் மூலம் சொல்லிய பெருமை ந. முத்துகுமாரை சாரும்….
நீங்களும் கேளுங்கள்.
எனக்கு பிடித்த வரிகள்
“அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்”

-பாடல்களை விமர்சனம் செய்யுமளவிற்கு நம்மக்கு அறிவு கிடையாது; இருப்பினும் பாட்டு பிடித்துள்ளதால் பகிரலாம் என்று நினைத்து பகிரந்துள்ளேன்… –

Comments

Popular posts from this blog

கங்கை நதியே கங்கை நதியே – சோகங்களே வாழ்க்கையின் வேதமோ

உணர்ந்தது