My self and Dr. AJ. Mohammed Ashry receiving two books from Dr. A. Jinnah Sharifudeen during a event held yesterday (13.03.2019). One book is the history of Maruthamunai
Original Post Here முக்கிய பல வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் Facebook என்று அழைக்கப்படும் முகப்புத்தகத்தில் Login செய்து நேரத்தை வீண்விரயம் செய்பவனாகவும். மருதமுனையை ஏதோ எங்களால் (நானும், எனது நண்பர் அணியும்) முடிந்த அளவிற்கு Maruthamunai Online மூலமாக உலகெங்கும் வீயாபிக்கச் செய்தது மட்டுமல்லாமல் தினமும் நடக்கும் சம்பவங்களை முடிந்தளவிற்கு ஒலி ஒளி வடிவில் உலகிற்கு எடுத்துச் செல்ல பங்களிப்பு செய்தவர்களில் ஒருவன் என்ற வகையிலும் முகப்புத்தகத்தில் மருதமுனை மக்கள் எனும் தலைப்பில் ஒரு சிறிய ஆகக்கத்தை எழுத தகுதியுடையவன் என்று நினைத்து இந்த ஆக்கத்தினை எழுத விளைகின்றேன். இவ்வாக்கம் Maruthamunai Online இல் பதிவேற்றம் செய்யக்கூடியதாக இருந்தாலும் இவ் எண்ணங்கள் Maruthamunai Online நிர்வாகத்தின் சிந்தனைகளாகவோ ஆசிரியர் பீடத்தின் சிந்தனைகளாகவோ யாரும் கருதிவிடக் கூடாது என்ற காரணத்திற்காக எனது தனிப்பட்ட Blog இல் பதிவேற்றம் செய்கிறேன். இது எனது தனிப்பட்ட சிந்தனை மட்டுமே என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முகப் புத்தகத்தில் தினந்தோறும் பல புதிய முகங்கள் இணைத்த வண்ண...
நமக்கு சும்மாவே நயன்தாராவை அப்படி பிடிக்கும், அதிலையும் ஒவ்வொரு சீன்லையும் இப்படி நடிச்சா.... Are You Okay Baby முதல் இறுதி வரை முழு காதலையும், அன்பையும் கொட்டி தீர்த்திருக்கின்றனர் விஜய் சேதுபதியும், நயன்தாராவும்... இந்த பாடலுக்காகவே நேற்று படம் பாக்க போக வேண்டியதாயிற்று. இப்பாடல் இவ்வளவு அழகாக வர பாடுபட அனைவருக்கும் ஒரு சலுயூட் ஒவ்வொரு வரியும் அன்பின் ஆழத்தை அவ்வளவு அழகாக உணர்த்தி நிற்கின்றது. இருப்பினும் இவ்வரிகள் எனக்கு சம்திங் ஸ்பெஷல் தாய்மொழி போலே நீ வாழ்வாய் என்னில் உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்
நேற்றைய தினம் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தினை எனது காதல் மனைவியுடன் பார்க்க கிடைத்தது. சமூக வலைத்தளங்களில் நேரான விமர்சனக்களை (positive review) பார்த்த பின்னரே இப்படத்திற்கு போகும் எண்ணம் எனக்குள் எழுந்தது. தங்கள் பாடசாலை பருவ காதலை இப்படத்தினூடாக அனுபவித்ததாக பலர் கருத்துக்கூறியிருந்தனர். என்னை பொறுத்தவரையில் எனது சொந்த வாழ்க்கையையும் தாண்டி பலரது தனிப்பட்ட விசயங்களையும் அறிந்தவன் என்ற வகையில் பள்ளி பருவ காதலையும் தாண்டி கல்லூரியில் காதலித்தவர்கள் முதல், வேலைத்தளத்தில் காதலித்தவர்கள் என வாழ்க்கையில் ஒரு முறையாவது காதலித்தவர்களுக்கு இப்படத்தில் வரும் பல காட்சிகள் தங்களது கடந்த வாழ்க்கையுடனும் மனதுடனும் ஒன்றித்து பயணிக்கும் என்பது நிதர்சனம். அதிலும் நீங்கள் இளையராஜாவில் பாடல்களுக்கு அடிமையென்றால் இப்படம் உங்கள் மனதில் பல நாட்களுக்கு நிழலாடும். எனக்கு பிடித்த காட்சிகளாக படத்தின் ஆரம்பத்தில் புகைப்படக்கலைக்கு “ அக்கணம் நமக்கு சொந்தம் ” என்று கூறப்படும் விளக்கம் குட்டி திரிஷா விஜய் சேதுபதி வகுப்பறையில் உடகார்வது.... Get together சமயத்தில் விஜய் சேதுபதி “யமுனை ஆற்றிலே” ப...
Comments
Post a Comment