சில சம்பவங்கள்.....



சம்பவம் 01 - சுனாமியின் பின் (2005)

ஷம்ஸ் மத்திய கல்லூரியின் கட்டிடங்கள் சுனாமியில் அழிவடைந்தமை நாம் அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து பாடசாலையினை எங்கு நிர்மாணிப்பது எனும் வாதம் எழுந்தது. ஒரு சாரார் பழைய இடத்திலும் மற்றொரு சாரார் மேட்டு வட்டையிலும் நிர்மாணிக்க வேண்டும் என விரும்பினர். இதில் எனது தந்தை மர்ஹூம் எச்.எல். ஜமால்தீன் அவர்கள் ஏற்கனவே இருந்த இடத்தில் அமைய வேண்டும் என்ற கொள்கையில் இருந்தார். அதன் பின்னர் மேட்டு வட்டையில் அமைய வேண்டும் என விரும்பின சாரார் தங்கள் பக்க நியாயங்களை எனது தந்தையிடம் எத்தி வைத்தனர். பின்னர் மேட்டுவட்டையில் வர வேண்டும் என்ற சாராருடன் இணைந்து பாடசாலையின் மீழ் நிர்மாணத்திற்கு தன்னை அர்பணித்திருந்தார்.
சம்பவம் 02 - 2017 அல்லது 2018

எமது ஷம்ஸ் மத்திய கல்லூரி ஆனது தேசிய பாடசாலையாக மாற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்டுவதாகவும், அதற்கு நாம் உதவி செய்ய வேண்டும் எனவும் ஷம்ஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க, கொழும்பு கிளை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அச்சமயம் நான் பின்வரும் விடயங்களை எத்தி வைத்தேன்.
1. தேசிய பாடசாலையாக மாறுவதில் நன்மை என்ன தீமை என்ன என்பன பற்றி ஆராயப்பட்டனவா?
2. மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் ஒரு பாடசாலை இயங்கும் போது ஏதாவது அதிபர் நியமனம் அல்லது ஆசிரியர் நியமனம் தொடர்பாக மாகாண சபையில் ஏதாவது ஒரு பாடசாலை அபிமானியினை கொண்டு சாதித்து விட முடியும், தேசிய பாடசாலையானால் இவ்வாறான தேவைக்கு நாம் மத்திய அரசாங்கத்தை நாட வேண்டி வரும் இச்சந்தர்ப்பத்தில் யார் காலில் விழுவது?
3. பழைய மாணவர்கள் அல்லது அபிவிருத்தி சங்கத்தவர்களினால் இதை சாதிக்க முடியும் என்றிருப்பினும் எமது ஆசிரிய ஆசிரியைகள் தங்கள் பிரச்சினைகளை மத்திய அரசாங்கத்தில் வந்து எவ்வாறு நிறைவேற்றி கொள்வார்கள்?
போன்ற கேள்விகளை முன்னிறுத்தி எனக்கும் ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்வதில் உடன்பாடு இல்லை எனவும் அப்படி தரமுயர்த்தப்பட்டாலும் கூட பாடசாலையின் பெயர் Shams Central College என்றே இருப்பது சிறந்தது எனவும் தேவை ஏற்படின் Shams Central College (National School) என்று மாற்றலாம் எனவும் எக்காரணம் கொண்டும் Shams National School என்று மாற்ற கூடாது என்றும் கூறி விட்டேன்.
சம்பவம் 03 - சம்பவம் 02 இன் பின்
இதே வேளை எமது சகோதர பாடசாலையான அல் மனார் மத்திய கல்லூரி சமூகத்துடன் எப்போதும் நான் நட்பானவனாகவே இருந்து வந்ததுடன், அவர்களின் பாடசாலை சார்ந்த சில செயற்பாடுகளை வெளிப்படையாகவே என்னுடன் ஆலோசிப்பவர்களாகவும், நானும் என்னாலான ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்துள்ளேன். அவர்களும் என்னை ஓர் அல் மனார் எதிர்ப்பாளன் என எண்ணியதாக நினைக்கவுமில்லை. அந்த வகையில் நாங்கள் அளவலாவிக்கொண்டிருக்கும் போது
பாடசாலையான அல் மனார் மத்திய கல்லூரி, தாங்களும் தேசிய பாடசாலையாக தரமுயத்த பாடுபடுவதாகவும், ஷம்ஸ் மத்திய கல்லூரியும் அதன் பின்னரே இதன் பின்னால் ஈடுபடுவதாவும் கூறப்பட்டிருந்தது.
சம்பவம் 04 - சம்பவம் 03 இன் பின்
மீண்டும் கொழும்பு கிளை கூட்டத்தின் போது தேசிய பாடசாலை தொடர்பான எனது சம்பவம் 02 இற்கான விளக்கமளிக்கப்பட்டது. அதில் முக்கியமாக சிறந்த பெளதீக வளமும் சிறந்த நிர்வாக திறன் மிக்க அதிபர் ஆசிரியர்களை பெற்று கொள்ளலாம் எனவும் நிறுவப்பட்டது.
அச்சந்தர்ப்பத்தில் அல் மனார் சமூகத்தின் கவலையினை வெளிப்படையாக சொல்லியிருந்தேன்.
ஷம்ஸ் மத்திய கல்லூரி தரமுயர்த்துதல் தொடர்பாக மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மற்றும் மர்ஹூம் ரபியுத்தீன் சேர் அவர்களின் காலப்பகுதியில் முஸ்தீபு எடுக்கப்பட்டதாகவும் அதனை மீழ தொடங்கியிருப்பதாகவுமே சொல்லப்பட்டது.
அச்சந்தர்ப்பத்தில் இரண்டு விடயங்கள் என்னால் தெளிவு படுத்தப்பட்டது.
1. ஷம்ஸ் மத்திய கல்லூரியின் இம்முயற்சி ஆனது எவ்வகையிலும் அல் மனாரினை வீழ்த்தும் முயற்சியாக இருந்து விட கூடாது என்பதாகவும் நான் எம்பக்க நியாயங்களை மட்டுமே எடுத்துரைக்க வேண்டும் எனவும்
2. எனக்கு தனிப்பட்ட ரீதியில் விருபமில்லாவிட்டாலும் கூட எமது பாடசாலை சமூகத்தின் விருப்புக்கு செவிசாய்க்கின்றேன் எனவும் நானும் என்னாலான உதவிகளை செய்கின்றேன் எனவும் கூறியிருந்தேன்.
ஷம்ஸ் நன்பர்கள் எனது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதுடன், அல் மனார் நண்பர்களுக்கும் எனது நிலைப்பாடு தெளிவாக எத்திவைக்கப்பட்டது.
சம்பவம் - 05 2021 April 02 ஆம் வாரம்

ஷம்ஸ் மத்தில கல்லூரி தேசிய பாடசாலையாக முதல் கட்டத்தில் தரமுயவதற்கான சகல பூர்வாங்க வேலைகளும் நடந்து விட்டதாகவும் 29 ஆம் திகதி நடக்கவிருக்கும் வைபவத்தில் எமக்கு அனுமதி கடிதம் கிடைக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.
சம்பவம் - 06 April 20

இறுதிக்கட்டத்தில் எமது பெயர் நீக்கப்பட்டு விட்டதாக எனக்கு கூறப்பட்டது. அதன் பின்னர் எடுத்த சில முயற்சிகளும் நிறைவேறாமல் போக எமது ஷம்ஸ் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரம் உயர்வது அல்லாஹ்வில் ஏற்பாடால் தடை படுகின்றது அல்லது பிற்போடப்படுகின்றது.

சம்பவம் - 07 April 21

சமூக ஊடகங்களில் இவ்விடயம் விவாதப்பொருளாக மாற, தொலைபேசி அழைப்பொன்று “மச்சான் என்ன விடயம், WhatsApp ல போகுது, உண்மை தானா? நம்மட school இல்லையாமே”, “ஆம்” என்று நான் பதிலளிக்க “இதற்கு முழு பொறுப்பையும் நீங்க தான் ஏற்கனும், நீங்க சரியா முயற்சி செய்யவில்லை” என வெந்த புண்னில் ஈட்டி வந்தேறியது. ஒரு வழியாக சமாளிச்சி தொலைபேசியை துண்டித்து விட்டேன்.
சம்பவம் - 08

அடுத்த ஈட்டி தொலைபேசி வழியாக வந்தது “உங்கட கூட்டாளி தான் வெட்டின”. “சேர் நான் அவ்விடத்தில் இருந்தால் ஒரு பாடசாலையினை வெட்டி இருக்க மாட்டேன் அவ்வாறு அவரும் வெட்ட மாட்டார் என்று நம்புறன்” என்று கூறி அவ்வழைப்பையும் ஒரு வழியாக சமாளித்து துண்டித்தாகி விட்டது.
இப்படி பல சம்பவங்கள்.
இதை வாசிக்கும் ஷம்ஸியன்களுடன் சில வரிகள்....
1. ஒவ்வொரு ஷம்ஸியனுக்கும் இருக்கும் மன வேதனை எனக்கு புரிகின்றது. இருப்பினும் தேசிய பாடசாலை எனும் வரும் போது சம்பவம் 02 இல் உள்ள விடயங்கள் எமக்கு சாதகமாகவே இருக்கின்றன.
2. நாம் பெயரளவில் தேசிய பாடசாலையாக மாறுவதில் எவ்வித அர்தமும் கிடையாது. எமது பாடசாலையில் மாணவர்களை எல்லா விதத்திலும் தேசியத்திலுள்ள பாடசாலைகளுடன் போட்டி போட வைக்க வேண்டும். அதற்கு நாம் வழி வகுக்க வேண்டும். எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அதற்கு தேசிய பாடசாலையாக மாற தேவையில்லை.
3. மனம் தளர வேண்டாம், நாம் பல விடயங்களை சாதிக்க காலம் கனிந்திருக்கின்றது. ஒற்றுமையுடன் முன்னேறுவோம்.
4. சமூக வலைத்தளங்களின் யாரையும் இகழ்வதையோ தூற்றுவதையோ எப்போதுமே நாம் செய்ய தேவையில்லை. Let’s get matured.
இதை வாசிக்கும் ஷம்ஸ் அதிபர்கள் ஆசிரியர்களுடன் சில வரிகள்....
1. நீங்கள் தேசிய பாடசாலை விடயத்தில் பல பிரயாயத்தங்களை முன்னெடுத்தீர்கள், நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
2. உங்களுக்கு தேவையாக உதவிகளை செய்ய பழையமாணவர்களாகிய நாம் இருக்கின்றோம். கல்விசார், கல்விசாரா விடயங்களில் உங்களுக்கு என்ன உதவி என்றாலும் பழைய மாணவர்களை அணுகலாம்.
3. உங்கள் கைகளியேலே இப்பாடசாலையின் எதிர்காலம் தங்கியுள்ளது என்பதை நினைவில் வைத்து கொண்டு இன்னும் வேகமாகவும் விவேகமாகவும் இயங்குவோம். தேசியத்தை தொடும் மாணவர்களை உருவாக்குவோம்.
சம்பவம் 01 இல், தனக்கு விருப்பமில்லாவிட்டாலும் கூட ஒரு விடயத்தில் இறங்கினால் 100% அதில் ஈடுபாடுடன் ஷம்ஸ் சமூகத்திற்கு பக்க பலமாக இருந்து சாதித்தவருக்கு மகனாக இருந்தும் இவ்விடயத்தில் சறுக்கி விட்டேனே என்ற ஆதங்கத்துடனும், கவலையுடனும், எதிர்காலத்தில் இதை நிவர்தி செய்ய வேண்டும் என்ற எண்னத்துடனும் விடை பெறும் நான்....
“Proud to be Shamsian”
சுஹைல் ஜமால்தீன்,
பழைய மாணவன்,
ஷம்ஸ் மத்திய கல்லூரி,
மருதமுனை.
25.04.2021
பி.கு: சம்பவத்தில் பெயர்கள் வேண்டு மென்றே தவிர்க்கப்பட்டிருப்பதுடன், இயன்றளவு சுருக்கமாக கூறப்பட்டிருக்கின்றன.

Comments

Popular posts from this blog

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

அன்பினால் அடிமையாக்கிய - நீயும் நானும் அன்பே

96 - பள்ளிப்பருவ காதலையும் தாண்டி மனதுடன் ஒன்றித்து பயணிக்கும்