Posts

ஷம்ஸ் தின T Shirt- Shams Day T Shirts

Image
எல்லாப் புகழும் இறைவனுக்கே. 2010 ஆம் ஆண்டு எனது பாடசாலையாகிய ஷம்ஸ் மத்திய கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழாவினையொட்டி நான் உட்பட எனது நண்பர்கள் இனைந்து மருதமுனையின் வரலாற்றில் முதல் தடவையாக பாடசாலை சார்பில் T Shirt களை வெளியிட்டுருந்தோம்.   தற்போது மீண்டும் ஷம்ஸ் தினம் 2017 இனை முன்னிட்டு மீண்டும் ஷம்ஸ்க்கென பொதுவாக T Shirt வெளியிடப்படவிருப்பது மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது. அதிலும் எனது பங்களிப்பு இருப்பதும், இது ஷம்ஸ் வரலாறில் இரண்டாவது முறை என்பதும் கூடுதல் மகிழ்ச்சி.  

நிறுவனம் – ஊழியர்

எந்த ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதால் ஊழியர்கள் அடிமை போல் வேலை செய்ய வேண்டும் என நினைக்கின்றதோ, அதே போல் எந்த ஒரு ஊழியர் தமது நிறுவனம் சம்பளம் கொடுக்கின்றது என்ற ஒரே ஒரு காரணத்துக்காக வேலைக்கு வருகின்றாரோ… இவ்விரு வகையினருடனும் வேலை செய்வது கடினம்…

குறை

தன்னிலும், பிறரிலும் குறை மட்டுமே கூறிக்கொண்டும், குறைகளை நிறைகளாக மாற்ற முயற்சிக்காமலும், முயற்சிக்க உதவாமலும் இருப்பவர் சந்தோசமாக வாழ மிகுந்த கஸ்டப்படுவது மட்டுமன்றி சூழ்த்துள்ளவரையும் கஸ்டப்படுத்துபர்…. குறைகளை மட்டுமே பாராமல் நிறைகளையும் பார்த்து ஏற்றுக்கொண்டு வாழ்வதே யாவருக்கும் சிறந்ததாக அமையும்..

Shams Inter House Sports Meet - 2017

Image
The football major games started on 1 st of March 2017 as a part of Inter House Sports Meet of my school Shams Central College, Maruthamunai. Myself and Mohamed Ashry were the guests representing Shams Past Pupils' Association, Colombo Branch. Here is the group photo.   

உணர்ந்தது

யாரும் யாருடைய வாழ்கையை நிர்ணயிக்க முடியாது.. நாம் சொல்லும் அறிவுரைகளை கேட்கலாம் கேட்காமல் விடலாம்; நாம் எமது அறிவுரைகளை திணிக்க முடியாது; அது எம்மை பெற்ற தாய் ஆயினும்; கட்டிய மனைவியாயினும்; பெற்றெடுத்த பிள்ளையாயினுக் சரியே! நாம் எமது பொறுப்புக்களை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து முடிப்பதில் தான் எமது கடமை தங்கியுள்ளது.

புதிய இடம்; புதிய நண்பர்கள்

Image
“No matter how we plan, the fate of the life is beyond that” வாழ்கையில் மற்றுமொரு திருப்பமாக புதிய வேலை வாய்ப்பை பெற்று கடந்த 3.10.2016 அன்று பொறுப்போற்றேன். JeyLabs/Ceymplon எனும் நிறுவனத்தில் Associate Tech Lead – SharePoint and Office 365 எனும் பதவியை பெற்றுக்கொண்டுள்ளேன். எல்லாம் வல்ல இறைவன் என்றும் போல் துணை புரிய வேண்டும். என்னை நம்பி பொறுப்புக்களை அளித்திருக்கும் Jey Srikantha அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடன்..

உணர்ந்தது…

நாம் பல உணசிகளுடனேயே படைக்கப்பட்டுள்ளோம்; முன்கோபம் அதில் ஒன்று. அடிக்கடி முன்கோபம் வருகிறது என உணர்ந்து அதை கட்டுப்படுத்த முயற்சிக்காவிட்டால் நாம் இழப்பது பல…