நா. முத்துகுமார் மற்றும் யுவன் ஷங்கராஜா இணைவின் மற்றுமொரு மாயம் "ஆராரோ பாட இங்கு தாயுமில்லை"

சில பாடல்கள் திடீரென மனதில் தோன்றி,  கண்ணில் ஈரத்தை வரவழைக்கும். அப்படியான ஒரு பாடல்தான் "ஆதலால் காதல் செய்வீர்" திரைப்படத்திலிருந்து "ஆராரோ பாட இங்கு தாயுமில்லை" பாடல்.

பாடலாசிரியர் ந. முத்துக்குமார் அவர்களின் மறைவு தமிழ் திரையுலகுக்கு எவ்வளவு பெரிய  இழப்பு என்பது இவ்வகையான பாடல்களை கேட்கும் போது தான் புரிகின்றது.

இந்த பாடலை படமாக்கிய விதமும் இப்பாடலை மேலும் சோகமாக்குகின்றது.

கடைசி வரை கலங்க கூடாது என்றிருந்தாலும் இறுதியில் அக்குழந்தை நிலத்தின் சூடு தாங்காமல் அழுவதை பார்த்ததும் எப்படி பட்ட கல் நெஞ்ச காரரும் கலங்குவர்.

எனக்கு பிடித்த வரிகள்
பூமியிது புனிதமில்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது
தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்றுக்கொள் நல்லது
இந்த உலகம் என்பது இன்பதுன்பம் உள்ள பாதையடா
நீ முட்டிமோதி எழ வழிகள் சொல்லித்தரும் கீதையடா



Comments

Popular posts from this blog

முகப்புத்தகத்தில் (Facebook) மருதமுனை மக்கள்

கங்கை நதியே கங்கை நதியே – சோகங்களே வாழ்க்கையின் வேதமோ