ஆருயிர் நண்பனுக்கு, அன்பு நண்பியின் பிறந்த தின வாழ்த்து
ஆயிரம் மனிதர்கள் அடுக்கடுக்காய் அவனியிலே அவதரித்திட.....
ஆயிரத்தில் ஒருவனாய் எனதுள்ளம் நிறைந்த அன்பான நட்பே ........
என் துயர் கண்ட போதினிலே துடித்திடும் புழுவாவாய்...
உடன் என் தோள் கொடுக்கும் தோழமையாவாய்....
இன்பம் அது திளைக்கையில் மகிழ்ந்திடும் என் உயிராவாய்.....
உச்சி முகர்ந்திடுவாய்.....
உன்னை போல் ஓர் நண்பன் யாவருக்கும் கிடைத்திட்டால் மனம் பட்டாம்பூச்சி போல் ஜனிக்கும்....
இன்று போல் என்றும் நீ உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வல்ல இறைவா துணைபுரிவானாக!
Comments
Post a Comment